Posts

Showing posts from October, 2021

தீபாவளி பலஹாரங்கள் Deepavali snacks

தீபாவளி ஸ்பெஷல்  30 வகை ஸ்வீட் / காரம்   லட்டு தேவையானவை: கடலை மாவு - 200 கிராம், சர்க்கரை - 350 கிராம், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, முந்திரி, திராட்சை - தலா 20, லவங்கம் - 8, டைமண்ட் கல்கண்டு - 15, பச்சைக் கற்பூரம் - ஒரு சிட்டிகை, முழு ஏலக்காய் - 5, பால் - ஒரு டீஸ்பூன், கேசரி கலர் - சிறிதளவு. செய்முறை: சர்க்கரையில் 50 மில்லி நீர்விட்டு சூடாக்கவும். கொதிக்கும்போது பால் விட்டு அழுக்கு நீக்கி, கேசரி கலர் சேர்த்து பாகு காய்ச்சி இறக்கவும். கடலை மாவை நீர்விட்டு பஜ்ஜி மாவு போல் கெட்டியாக கரைக்கவும். எண்ணெயை சூடாக்கி, மாவை லட்டு தேய்க்கும் கரண்டியில் விட்டு எண்ணெயில் விழும்படி தேய்த்து, முத்து முத்தாகப் பொரித்து பாகில் சேர்க்கவும். முந்திரி, திராட்சை, லவங்கம் இவற்றை பொரித்து முழு ஏலக்காய், டைமண்ட் கல்கண்டு, பச்சைக் கற்பூரம் சேர்த்து, சர்க்கரை பாகு - பூந்தி கலவையில் கொட்டிக் கிளறவும். கை பொறுக்கும் சூட்டில் லட்டு பிடிக்கவும். குறிப்பு: கடலைப்பருப்பை வெயிலில் காயவைத்து, மெஷினில் அரைத்தால்தான் லட்டு சூப்பர் சுவையில் அசத்தும். செய்து வைத்த பாகு உறைந்து கெட்டியாகிவிட்டால் கவலை வ...

சீந்தில் கொடி

ஆயுளை நீட்டிக்கும் சீந்தில் கொடி என்கிற அமிர்தவல்லி்மூலிகை. https://youtu.be/fZbetGDHSj8 https://youtu.be/DYr_AkRX6iQ (அமிர்தம் என்றால் என்ன?என்பது தொடர்பாக இணையத்தில் தேடிய போது  அமிர்தவல்லி எனப்படும் சீந்தில் பற்றி பல் இணையதள முகவரிகளில் படித்த பதிவுகளின் தொகுப்பு) ஆயுளை நீட்டிக்கும் அதிசயப் பொருள் ஏதேனும் உண்டா?’ என்று கேட்பவர்களிடம், ‘இருக்கவே இருக்கிறது சீந்தில்’ எனச் சட்டெனப் பதில் உரைக்கலாம்! ஆரோக்கியம் தந்து வாழ்நாளை நீட்டிப்பது, நீண்ட ஆயுளோடு வசீகரத்தையும் விருத்தி செய்யக்கூடியது அமிர்தம் ஆகும்.  அந்த அமிர்தத்தின் மகத்துவங்கள் அத்தனையையும் ஒரு மூலிகைக் கொடியிலேயே நமக்குக் கிடைக்க வேண்டும் என்றுதான் இறைவன் சீந்தில் கொடியைப் படைத்துள்ளான்.  அதனால்தான் சீந்தில் கொடியை அமிர்தக்கொடி, அமிர்தவல்லி என்கிறார்கள். வயோதிகம் வாட்டும் போதும், தீராப் பிணிகளால் அவதியுறும் நேரத்திலும், உடல் நலனை மீட்டெடுக்க சீந்தில் போதும்!  பல பருவங்களைக் கடந்து வாழும் ‘மூலிகை மார்க்கண்டேயரான’ சீந்தில் கொடி, மனித குலத்தில் பல மார்க்கண்டேயர்களை உருவாக்குகிறது. சீந்தில் பெயர்க்காரணம்: சோமவல்...

மைக்ரேன் Migraine

மைக்ரேன் எனும் ஒற்றைத்தலைவலியைக் கட்டுப்படுத்த சில  டிப்ஸ்  Dr.A.B.ஃபரூக் அப்துல்லா  பொது நல மருத்துவர்  சிவகங்கை  Tamil https://youtu.be/nqr0VXbkQec https://youtu.be/_Z0KYuQjHdU English: https://youtu.be/S0sk8tO30RU https://youtu.be/CRugZ7SOml8 மைக்ரேன் எனும் ஒற்றைத்தலைவலியானது வெடீர் வெடீர் என்று சுத்தியலைக்கொண்டு தலையில் அடித்தாற் போன்ற வலியை ஏற்படுத்துவதாக மக்கள் கூறுவதைக் கேட்கும் போது உண்மையில் அது எத்தனை பிணி தரும் அனுபவமாக இருக்கும் என்பதை யூகிக்க முடியும்   ஆண்களை விட பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.  குடும்பத்தில் தாய் அவரது மகள்கள் முதல் பேத்திகள் வரை அனைவருக்கும் மைக்ரேன் இருக்கும் குடும்பங்களை பார்த்து வருகிறோம்  வாழ்க்கைத்தரத்தை வெகுவாக பாதிக்கும் இந்த தலைவலியானது  பாதிப்புக்குள்ளாகும் நபரின் செயல்திறனை வெகுவாக குறைக்கும் தன்மை கொண்டதாக இருக்கின்றது  நன்றாக படிக்கும் ஒரு மாணவிக்கு அவர் பரீட்சை எழுதும் நாட்களுக்கு முன்பு மைக்ரேன் வந்தால் அத்தோடு படிப்பின் மீது கவனம் குவிக்க இயலாமல் முழு மூச்சுடன் படிக்க இயலாது. மதிப்பெண்...

Higginbothams

The Stowaway who gave India it’s oldest library: Over 180 years ago a young Englishman Abel Joshua Higginbotham boarded a ship. When discovered by the captain, he was thrown out at the port of then Madras presidency.  Luckily for him, being a librarian, he found employment as a store manager of Wesleyan Book Shop. The store catered to local theologians and largely sold religious works. Abel was a sincere and dedicated worker, but the mission was losing its profits and in 1844, when they decided to shut the store, they offered Higginbotham the option of buying out the stock. Higginbotham’s mother died when he was 12 and he was in the care of missionaries of the Church of Scotland. His obit, written soon after his death in 1891, states that he had two careers before he went on to become the owner of the bookstore. One was that of a seaman, an occupation he took up after he completed school. The vagaries of the sea, and the rough life, evidently didn’t appeal to him. When he tried to ...

பிறந்த நாள் Birthday

ஓம் நமோ ஸ்ரீமந் நாராயணாய https://youtu.be/dd_bK8JYnV8 https://youtu.be/01L3Zz9E204 நாம் பிறந்த ஜென்ம நட்சத்திரத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா ஜென்ம நட்சத்திரத்தின் மகிமை  சந்திரன் எந்த ஒரு ராசியில், ஏதோ ஒரு நட்சத்திர பாதத்தில் இருப்பார்.  அதுவே நாம் பிறந்த நட்சத்திரம் அல்லது ஜென்ம நட்சத்திரம் என்கிறோம்.  பிறந்த நட்சத்திரம் மற்றும் அந்த நட்சத்திரத்திற்கு அதிபதியானவர் நம் உடலை இயக்குபவர்.  கர்ம வினைகளுக்கேற்ப நம் உடல் அனுபவிக்கும் நன்மைகளுக்கு காரணமானவர்கள் இந்த ஜென்ம நட்சத்திரம் மற்றும் அதன் அதிபதி ஆவார்கள். குறிப்பாக ஆலய வழிபாட்டிற்கு மிக, மிக உகந்த தினமாக ஜென்ம நட்சத்திர தினம் குறிப்பிடப்பட்டுள்ளது.  ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திரம் அன்று கோவிலுக்குச் சென்று அர்ச்சனைகள் செய்து வழிபட வேண்டும் என்று சொல்லி வைத்தார்கள்.  அவ்வாறு வழிபடுவதால் நம் துன்பங்களின் தாக்கத்தை பெருமளவு குறைத்துக்கொள்ள முடியும். ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திரங்கள்தான் அனைத்து வித தோஷங்களுக்கும் பரிகாரம் செய்ய உகந்த நாட்களாகும். ஜென்ம நட்சத்திர தினத்தன்று செய்யப...

ஐப்பசி துலா ஸ்நானம். Libra bath

ஐப்பசி துலா ஸ்நானம் - https://youtu.be/jLebNUV24SA  https://youtu.be/jLebNUV24SA காவிரியில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும்  ஐப்பசி மாதத்தைத் தமிழில் துலா மாதம் என்பார்கள். துலா என்றால் தராசு. தராசு எவ்வாறு நடுநிலையைத் தன் முள் காட்டி நிற்கிறதோ, துலா மாதமும் பகலையும் இரவையும் சமமாகத் துல்லியமாகக் கொண்டுள்ளது என்பதை குறிக்கவே துலா மாதம். சூரியன் இந்த மாதம் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார் எனவே இதுவும் ஒரு காரணமாயிற்று.    காவிரியில் தினசரியும் நீராடினால் நன்மைதான் என்றாலும் ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவது காசியில் ஓடும் கங்கை நதியில் நீராடுவதற்கு சமம் என்று புராணங்கள் கூறுகின்றன. ஏனெனில் ஐப்பசி மாதமானது துலா மாதத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி முதலான பாரதத்தில் ஓடும் நதி தேவதைகள் அனைத்தும் காவிரியில் நீராடி, தங்களிடம் மானிடர்கள் கரைத்துச் சென்ற பாபக்கறைகளைப் போக்கிக் கொள்கின்றது என்று காவிரி மகாத்மியம் என்னும் நூல் கூறுகிறது.    எனவே ஐப்பசி மாதத்தில் எல்லா நாள்களிலும் காவிரி துலாக் கட்டத்தில் நீராடி, இறைவனை வழிபடுவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. காவிர...

தண்ணீர் நலம் காக்கும் Water on health

நீர் எவ்வாறு நீரேற்றமாக இருக்க உதவுகிறது, ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் பல !! தண்ணீர் மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட ஊட்டச்சத்து மற்றும் அதை சரியான அளவில் குடிப்பது பலவிதமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது, உண்மையில் பலர் இதை வாழ்க்கையின் அமுதம் என்று அழைத்தனர்.  நாம் அனைவரும் அறிந்தபடி, தண்ணீர் மனித உடலில் 70% ஆக உள்ளது மற்றும் உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுக்களிலும் நீரேற்றம், நச்சுத்தன்மை மற்றும் வெப்பநிலையை பராமரிக்க செயல்படுகிறது, இது ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழிநடத்த உதவுகிறது. செல் கட்டமைப்பின் நேர்மை: முடி, தோல் மற்றும் நகங்கள் போன்ற உயிரணுக்களின் ஒருமைப்பாட்டை பராமரிக்க நீர் தேவைப்படுகிறது, மேலும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு இது கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது, இது வயதான எதிர்ப்பு கண்ணோட்டத்தில் உதவுகிறது.  கூடுதலாக, மூட்டுகள் மற்றும் முதுகெலும்புகளின் ஒருமைப்பாட்டை பராமரிப்பது தொடர்பாக, குடிநீரும் உராய்வைக் குறைக்க உதவுகிறது. உடல் வெப்பநிலையை பராமரிக்கிறது: உடல் வெப்பநிலையை பராமரிக்க திரவ சமநிலையை பராமரிப்பது முக்கியம்.  ...

சரஸ்வதி பூஜை Tools Prayer

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை      பூஜை செய்ய உகந்த நேரம் காலை 09.00  முதல் 10.30  வரை பிற்பகல் 01.00 முதல் 01.30 வரை மாலை 04.30  முதல் 07.00  வரை ஆயுத பூஜை..!! அன்னை துர்க்கை போருக்காக தன் ஆயுதங்களைப் பூஜித்ததை கொண்டாடும் விதமாகவும், பொதுமக்கள் தன் தொழிலுக்கான மூல ஆயுதமாக இருக்கும் பொருட்களை பூஜிக்கும் நாளாகவும் நவமி திதியில் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சரஸ்வதி பூஜை என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது. ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்துவதற்கு தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. வருடம் முழுவதும் நமக்காக, நம் முன்னேற்றத்திற்காக பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், வாகனங்கள், பொருட்களுக்கு நாம் நன்றி சொல்வது இந்நாளின் நோக்கமாகும். வழிபடும் முறை : அன்றைய நாள் வீடு, கடைகளை சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் கடவுளின் இருப்பிடமாகும். அன்றைய நாள் வாகனங்களையும் சுத்தம் செய்தல் அவசியம். தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள், ஆயுதங்கள் போன்றவற்றை சுத்தம் செய்தல் வேண்டும். சுத்தம் செய்த பின் தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்களை ...

ஆதித்தியன் சூரியன் Sun Solar

சூர்யம் சுந்தர லோகநாத மம்ருதம் வேதாந்த ஸாரம் சிவம் ஞானம் பிரம்ம மாயம் சுரேச மாமலம் லோகைக சித்தஸ்வயம் இந்த்ராதித்ய நராதிபம் சுரகுரும் த்ரைலோக்ய சூடாமணிம் பிரம்மா விஷ்ணு சிவஸ்வரூப ஹ்ருதயம் வந்தே ஸதா பாஸ்கரம் ஞாயிற்றுக்கிழமை  சூரியவழிபாடு  செய்ய நலம். சூரியன் பிரத்யட்ச மான தெய்வம். எல்லாருமே கண்களால் கண்டு வணங்கக்கூடிய தெய்வம். சூரிய வழிபாடு அனைவருக்கும் பொதுவான வழிபாடு. உலக உயிர்கள் அனைத்தையும் தன் ஒளியினால் வாழவைப்பவர் சூரியன். அபயம் அல்லது எதற்கும் அஞ்சாத தன்மையை அளிப்பவர் நாராயணன் என்பது சித்தாந்தம். உயிரினங் களைஅச்சத்திலிருந்து காப்பவரே ஆதித்யன் என்ற சூரிய பகவான். இருள் சூழ்ந்திருக்கும்போது எல்லா உயிர்கள் அச்சத்தினால் மருண்டிருக்கின்றன. சூரியன் உதித்தவுடன் ஒளியினால் அச்சங்கள் தவிர்க்கப்படுகின்றன. இதனாலயே சூரிய நாராயணன் என்று பெயர் விளங்குகிறது. ஆதிசங்கரர் ஆறுவித முக்கிய தெய்வங்களாகிய கணபதி, சுப்ரமணியர், அம்பிகை, சிவன், விஷ்ணு, சூரியன் என்று உபாசனா மார்க்கத்தை நாம் எல்லாரும் உய்யும் பொருட்டு உபதேசித்தருளினார். நமக்கு எந்த தெய்வத்திடம் ஈடுபாடு ஏற்படுகிறதோ அந்த தெய்வத்தையே துதி...