பிறந்த நாள் Birthday

ஓம் நமோ ஸ்ரீமந் நாராயணாய

https://youtu.be/dd_bK8JYnV8
https://youtu.be/01L3Zz9E204


நாம் பிறந்த ஜென்ம நட்சத்திரத்தில்
இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா

ஜென்ம நட்சத்திரத்தின் மகிமை 

சந்திரன் எந்த ஒரு ராசியில், ஏதோ ஒரு நட்சத்திர பாதத்தில் இருப்பார். 

அதுவே நாம் பிறந்த நட்சத்திரம் அல்லது ஜென்ம நட்சத்திரம் என்கிறோம். 

பிறந்த நட்சத்திரம் மற்றும் அந்த நட்சத்திரத்திற்கு அதிபதியானவர் நம் உடலை இயக்குபவர். 

கர்ம வினைகளுக்கேற்ப நம் உடல் அனுபவிக்கும் நன்மைகளுக்கு காரணமானவர்கள் இந்த ஜென்ம நட்சத்திரம் மற்றும் அதன் அதிபதி ஆவார்கள்.

குறிப்பாக ஆலய வழிபாட்டிற்கு மிக, மிக உகந்த தினமாக ஜென்ம நட்சத்திர தினம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திரம் அன்று கோவிலுக்குச் சென்று அர்ச்சனைகள் செய்து வழிபட வேண்டும் என்று சொல்லி வைத்தார்கள். 

அவ்வாறு வழிபடுவதால் நம் துன்பங்களின் தாக்கத்தை பெருமளவு குறைத்துக்கொள்ள முடியும்.

ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திரங்கள்தான் அனைத்து வித தோஷங்களுக்கும் பரிகாரம் செய்ய உகந்த நாட்களாகும்.

ஜென்ம நட்சத்திர தினத்தன்று செய்யப்படும் வழிபாட்டால், எந்தவொரு தெய்வமும் அருள் செய்தே தீர வேண்டும் என்பது பிரபஞ்சத்தின் ரகசியம். 

ஜென்ம நட்சத்திர வழிபாட்டில் உள்ள ஆன்மீக ரகசியமே இதுதான்.

எனவே, ஜென்ம நட்சத்திர வழிபாட்டு வாய்ப்பை ஒரு போதும் தவறவிட்டு விடாதீர்கள். 

குறைந்தபட்சம் ஆலயத்தில் ஒரு அகல் விளக்காவது ஏற்றி வழிபாடு செய்யுங்கள். 

உங்கள் ஜாதகத்தின் மூலம் (தீமைகள் அகல, தோஷம் விலக) எந்த கடவுளை வழிபட வேண்டும் என்று தெரிந்து வைத்துக்கொண்டு வழிபாடு செய்தால் கர்ம வினைகள் தீரும் என்பது குறிப்பிடத்தக்கது.

பலன்கள் :

ஜென்ம நட்சத்திர பூஜை முடிந்ததும், ஏழை - எளியவர்களுக்கு உங்களால் முடிந்த தானங்கள் செய்தால், பித்ருக்களின் ஆசி கிடைக்கும்.

ஜென்ம நட்சத்திர வழிபாட்டை ஒருவர் தொடர்ந்து செய்து வந்தால் அவரை கண் திருஷ்டி நெருங்காது. 

தடைபடும் செயல்கள் அனைத்திலும் ஜெயம் உண்டாகும்.

ஜென்ம நட்சத்திர தினத்தன்று அவரவர் தகுதிக்கேற்ப ஆலயங்களில் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் செய்வது அல்லது 
பணம் இல்லாத பட்சத்தில் கவலைப்பட வேண்டாம் உடலால் கோவிலுக்கு உபகாரம் செய்வது மிகவும் நல்லது. 

வசதி இருப்பவர்கள் ஜென்ம நட்சத்திரம் அன்று கணபதி ஹோமம் சுதர்சன ஹோமம் செய்தால் கூடுதல் பலனை பெற முடியும். 

ஒவ்வொரு மாதமும் ஜென்ம நட்சத்திரம் எந்த தேதியில் வருகிறது என்பதை நாட்காட்டியில் குறித்து வைத்துக்கொண்டு அன்றைய தினம் எவ்வளவு வேலை இருந்தாலும் சிறிது நேரம் ஒதுக்கி குல தெய்வ ஆலயத்திற்கு அல்லது உங்கள் இஷ்ட தெய்வ ஆலயத்திற்கு சென்று தனது ஜென்ம நட்சத்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்வதால் நம் கஷ்டங்கள் ஓரளவு குறைந்து நல்லதே நடக்கும்.. 

மற்றும் ஜென்ம நட்சத்திரத்தை பலம் பொருந்தியதாக மாற்றும்.

அப்படி செல்ல முடியாத பட்சத்தில் பசுவைப் பார்த்தால் மாட்டிற்கு அருகம்புல் கொடுத்து ஒரு நமஸ்காரம் செய்யுங்கள் போதும்.

அதுவே சகல தெய்வங்களையும் வணங்கியதற்குச் சமம்.

Om Namo Sriman Narayanaya

 https://youtu.be/dd_bK8JYnV8

 https://youtu.be/01L3Zz9E204

 In the zen star where we were born

 There are so many things

 The glory of the star of Janma

 The Moon is in any zodiac sign, something in the foot of a star.

 That is what we call the birth star or the birth star.

 The birth star and the lord of that star is the one who directs our body.

 This genma star and its lord are responsible for the benefits our body enjoys according to karmic reactions.

 Genma Star Day has been mentioned as the most auspicious day, especially for temple worship.

 They told us to go to the temple and worship on the coming Janma Nakshatra every month.

 Doing so can greatly reduce the impact of our suffering.

 The zodiac stars that come every month are the best days to make amends for all kinds of flaws.

 It is the secret of the universe that any deity should be blessed by the worship performed on the day of Janma Nakshatra.

 This is the spiritual secret of Janma Nakshatra worship.

 So, never miss the chance to worship the Genma star.

 Worship at least one lantern in the temple.

 It is noteworthy that the karmic reactions will be resolved if you know and worship any god through your horoscope (evil is wide, evil is avoided).

 Benefits:

 After the Janma Nakshatra Puja, if you make all possible donations to the poor and simple, you will get the blessings of the Pitras.

 If one continues to perform Janma Nakshatra worship, the eye will not come close to him.

 Victory over all obstacles.

 On the day of Janma Nakshatra, he performs anointing rites, special pujas for the source in the temples he deserves or

 Do not worry if you do not have money It is very good to do bodily favors to the temple.

 Those who have the facility can get extra benefit if they do Ganapati Homam Sudarsana Homam on Janma Nakshatra.

 Keeping track of the date of the zodiac star each month and no matter how much work you do that day, set aside some time and go to the Kula Deva Temple or your favorite Deva temple and recite his zodiac star and our hardships will be lessened to some extent.

 And make the genma star a strength match.

 If it is not possible to go like that, if you see a cow, it is enough to give a prayer to the cow.

That is the same as worshiping all the gods.

Comments

Popular posts from this blog

பாவம் புண்ணியம்

திருமாங்கல்யம்

நேர்மறை சக்தி