சீந்தில் கொடி

ஆயுளை நீட்டிக்கும் சீந்தில் கொடி என்கிற அமிர்தவல்லி்மூலிகை.

https://youtu.be/fZbetGDHSj8

https://youtu.be/DYr_AkRX6iQ

(அமிர்தம் என்றால் என்ன?என்பது தொடர்பாக இணையத்தில் தேடிய போது  அமிர்தவல்லி எனப்படும் சீந்தில் பற்றி பல் இணையதள முகவரிகளில் படித்த பதிவுகளின் தொகுப்பு)

ஆயுளை நீட்டிக்கும் அதிசயப் பொருள் ஏதேனும் உண்டா?’ என்று கேட்பவர்களிடம், ‘இருக்கவே இருக்கிறது சீந்தில்’ எனச் சட்டெனப் பதில் உரைக்கலாம்!

ஆரோக்கியம் தந்து வாழ்நாளை நீட்டிப்பது, நீண்ட ஆயுளோடு வசீகரத்தையும் விருத்தி செய்யக்கூடியது அமிர்தம் ஆகும். 

அந்த அமிர்தத்தின் மகத்துவங்கள் அத்தனையையும் ஒரு மூலிகைக் கொடியிலேயே நமக்குக் கிடைக்க வேண்டும் என்றுதான் இறைவன் சீந்தில் கொடியைப் படைத்துள்ளான். 

அதனால்தான் சீந்தில் கொடியை அமிர்தக்கொடி, அமிர்தவல்லி என்கிறார்கள்.

வயோதிகம் வாட்டும் போதும், தீராப் பிணிகளால் அவதியுறும் நேரத்திலும், உடல் நலனை மீட்டெடுக்க சீந்தில் போதும்! 

பல பருவங்களைக் கடந்து வாழும் ‘மூலிகை மார்க்கண்டேயரான’ சீந்தில் கொடி, மனித குலத்தில் பல மார்க்கண்டேயர்களை உருவாக்குகிறது.

சீந்தில் பெயர்க்காரணம்: சோமவல்லி, அமிர்தவல்லி, அமிர்தை, குண்டலி, அமிர்தக்கொடி போன்ற பல பெயர்களை
கொண்டது சீந்தில்.

‘வல்லி’ என்றால் ‘கொடி’ என்ற பொருளில், கொடி வகையான சீந்திலுக்கு அமிர்த‘வல்லி’ எனும் பெயர்.

அமிர்தம் என்றால் ‘அழியாத தன்மையைக் கொடுக்கும்’ என்ற அர்த்தத்தில் ‘அமிர்தை’ எனும் பெயர் இதற்கு ஏற்பட்டிருக்கிறது.

இதில் பொற்சீந்தில் எனும் இனமும் உண்டு.

சீந்தில் கொடி அடையாளம்: 

இதய வடிவ இலைகளைச் சுமந்துகொண்டு சரசரவெனக் கொடியேறும் தன்மையை இது கொண்டுள்ளது.

கொடி வகையானாலும், முற்றிய சீந்தில் கொடி வலிமைக்கு எடுத்துக்காட்டாய்த் திகழும்.

சீந்தில்கொடி ஒரு சாகாமூலிகை, காய கற்ப மூலிகையான இது ஒரு ஒட்டுண்ணியாகும்

ராமாயணக் கதையில் வரும் வாலிக்கு தன் எதிரில் பட்டவர் பலம் பாதி வருவதைப் போல், சீந்தில் கொடியானது அது படரும் தாவரத்தின் பாதி பலத்தினை எடுத்துகொள்கிறது.

இந்த சீந்தில் கொடி, வேப்ப மரத்தின் மேல் படர்ந்திருந்தால் சிறந்த மருத்துவ குணங்களைப் பெற்றிருக்கும் என மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன.

இது உயிர் கொல்லி நோய்களான சர்க்கரை, புற்று நோய், எலும்புருக்கி (எய்ட்ஸ்) போன்ற நோய்களுக்கு அரு மருந்தாக செயல்படுகிறது
 ‘மெனிஸ்பெர்மேசியே’ (Menispermaceae) குடும்பத்தின் உறுப்பினரான சீந்தில் கொடியின் தாவரவியல் பெயர் ‘டினோஸ்போரா கார்டிஃபோலியா’ (Tinospora cordifolia).
 ‘ஃபுரானோலேக்டோன்’ (Furanolactone), ‘டினோஸ்போரின்’ (Tinosporin), ‘பெர்பெரின்’ (Berberine), ‘பால்மடைன்’ (Palmatine) போன்ற மருத்துவ வேதிக்கூறுகளை சீந்தில் அதிகமாக வைத்திருக்கிறது.

இலை, தண்டு, வேர் அனைத்தும் மருந்தாகிப் பயன்தரக்கூடிய குணம் கொண்டது சீந்தில். 

செரிமானமின்மை, வலி, சோர்வு ஆகியவற்றை குணமாக்கும் தன்மையுடையது.

தாது விருத்தியை உண்டாக்கக்கூடியது. 

விட்டுவிட்டு வந்து துன்பம் செய்யும் காய்ச்சலைத் தீர்க்கக் கூடியது. 

வீக்கத்தைக் கரைக்கக்கூடியது. 

மூட்டு வலிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடியது.

ரத்தத்தின் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தக் கூடியது.

கல்லீரலைப் பலப்படுத்தக் கூடியது. 

உடல் தேற்றியாக விளங்குவது. காம உணர்வைத் தூண்டக் கூடியது. 

வயிற்றுக் கோளாறுகளை வேரறுக்கக் கூடியது என எண்ணற்ற மருத்துவப் பலன்களைக் கொண்டது சீந்தில் கொடி.

சீந்தில் கொடித் தீநீர் வாத சுரத்தையும், பித்த சுரத்தையும் தணிக்கும் வல்லமை கொண்டது. 

சீந்தில் கொடியிலிருந்து தயாரிக்கப்படும் மாவு (சீந்தில் சர்க்கரை) வயிற்றில் சேர்கிற அமிலத் தன்மையினைப் போக்கக் கூடியது.

வயிற்றுப்போக்கை வற்றச் செய்வது. சீத பேதியைக் குணப்படுத்தக்கூடியது. 

ஆயுர்வேத மருத்துவ நூல்கள் உலர்ந்த சீந்திலை மஞ்சள் காமாலையை குணமாக்கவும்,ரத்த சோகையைப் போக்கவும், அடிக்கடி சிறுநீர் கழிப்பதைத் தவிர்க்கவும், சரும நோய்களை குணமாக்கவும் பரிந்துரை செய்கிறது.

‘மேகமெனு மாதபத்தால் வெந்த வுயிர்ப்
பயிரைத்
தாக மடங்கத் தணித்தலால் - ஆகம்
அமர ரெனலிருக்க வாதரித்த லாலே
அமுதவல்லி சஞ்சீவி யாம்.’ -  என்கிறது 
சித்தர் பாடலான தேரன் வெண்பா.

நீரிழிவு என்றும் மதுமேகம் என்றும் சொல்லப்படுகிற சர்க்கரை நோயால் ஏற்பட்ட வாட்டத்தை வெயிலால் வெந்து வாடிய பயிரை உயிர் கொடுத்துக் காத்த மழைபோல போக்கக் கூடியது சீந்தில்.

நாவறட்சியையும் உடற்சூட்டையும் போக்கக் கூடியது,

ஆரோக்கியமுடன் வாழவும் தீராத நோய்களை தீர்த்து வைக்கவும் உதவக்கூடிய சஞ்சீவி மூலிகை சீந்தில் என்பது மேற்கண்ட பாடலின் பொருள் ஆகும். 

மேலும் இன்னொரு பாடலில்,

‘அமுதவல் லிக்கொடி யக்கார முண்டிடத்
திமிருறு மேகநோய்த் தீபெலா மாறுமே.’
- என்றும் குறிப்பிட்டிருக்கிறார்  தேரையர். 

அமிர்தவல்லி எனும் சீந்தில் கொடியிலிருந்து எடுக்கப்படும் சீந்தில் சர்க்கரையை உண்டு வந்தால் கை, கால்கள் மரத்துப் போவது போன்ற சின்ன பிரச்னைகள் முதல் பால்வினை நோயினால் ஏற்பட்ட துன்பங்கள் வரை விடுதலை கிடைக்கும். 

இன்னொரு பாடலில் சீந்தில் 
கொடியின் சர்க்கரையால் பதினெட்டு வகையான சரும நோய்களை போக்க முடியும் என்கிறார்.

சீந்தில் மருந்தாகிப் பயன்தரும் விதம்

* சீந்தில் கொடியிலிருந்து இலைகளைப் பிரித்து நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். 

உலர்ந்த இலைகளைப் பொடித்து வைத்துக்கொண்டு நீரில் கலந்து ஒரு தேக்கரண்டி அளவு காலை, மாலை இரண்டு வேளையும் குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.

* சீந்தில்  தண்டுகளைக் காய வைத்து ஒரு தேக்கரண்டி பொடியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்தப் பொடியை நான்கு டம்ளர் நீர் விட்டு காய்ச்ச வேண்டும்.

ஒரு டம்ளர் அளவாக சுண்டிய பிறகு காலையில் வெறும் வயிற்றில் குடித்து  வந்தால் பசியின்மை, வயிற்றுவலி, செரிமானமின்மை ஆகிய துன்பங்கள் விலகும். 

காய்ச்சலுக்கும் இது நல்ல மருந்து. 

* சீந்தில் கொடியை இடித்து குளிர் நீர் விட்டு ஊற வைக்க வேண்டும். மறுநாள் நன்றாகக் கடைந்து திப்பியை நீக்கிவிட்டு நீரை மட்டும் வெயிலில் வைத்திருந்தால் நீர் தெளிந்துவரும். 

அந்த தெளிந்த நீரை வடிகட்டிவிட்டு புதிதாக தண்ணீர் சேர்த்து கலக்கி வெயிலில் சுண்ட வைக்க வேண்டும். இப்படி பலமுறை செய்வதால் வெண்மையான மாவு போன்ற பொருள் நமக்குக் கிடைக்கும். 

இதுவே சீந்தில் சர்க்கரை எனப்படும். (இந்த சீந்தில் சர்க்கரை நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கிறது.)

இந்த சீந்தில் சர்க்கரையை ஒரு கிராம் முதல் நான்கு கிராம் வரையில் வாயிலிட்டு நீர் அருந்துவதால் கடும் ஜுரத்துக்கு பின் ஏற்படும் உடல் இளைப்பு, மண்ணீரல் வீக்கம், இருமல், மூர்ச்சை, வாந்தி, ஆஸ்துமா ஆகியன குணமாகும்.

மேலும் இதனால் நாட்பட்ட சிறுநீர்ப்பை நோய்களுக்கும் தீர்வு கிடைக்கும்.

* சீந்தில் இலையை அனலில் இட்டு வாட்டி, இளஞ்சூட்டோடு புண்களின் மேல் போட்டுவர வீக்கம் கரைந்து வலி குறையும். புண்களும் ஆறிவிடும்.

* சீந்தில் கொடி 35 கிராம் அளவு எடுத்து நசுக்கி அதனோடு  கொத்தமல்லி, அதிமதுரப்பொடி வகைக்கு 4 கிராம் அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.அதனோடு 300 மி.லி. நீர் சேர்த்து சோம்பு, பன்னீர் ரோஜாப்பூ ஆகியன தலா 10 கிராம் சேர்த்து இரண்டு டம்ளர் நீர்விட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். 

பிறகு வடிகட்டி வைத்துக்கொண்டு 25 மி.லி. முதல் 50 மி.லி. வரை தினமும் காலையில் எடுத்துக் கொண்டால் வயிற்று உப்புசம், நாள்பட்ட செரிமானமின்மை, வயிற்றைப் பாதித்துத் துன்பம் செய்கிற பல்வேறு நோய்களும் விலகும்.

* சீந்தில் கொடியோடு நெற்பொரி வகைக்கு 50 கிராம் அளவு எடுத்து சேர்த்து ஒரு லிட்டர் நீர் விட்டுக் காய்ச்சி, 150 மி.லி. ஆகச் சுண்டச் செய்து தினமும் இருவேளை 
50மி.லி. அளவு குடித்துவர மேகச்சூடு, நாவறட்சி நீங்கும்.

"மூட்டு வலிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடியது. ரத்தத்தின் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தக் கூடியது. கல்லீரலைப் பலப்படுத்தக் கூடியது. உடல் தேற்றியாக விளங்குவது. காம உணர்வைத் தூண்டக் கூடியது. வயிற்றுக் கோளாறுகளை வேரறுக்கக் கூடியது என 
எண்ணற்ற மருத்துவப் பலன்களைக் கொண்டது சீந்தில் கொடி

சீந்தில் கொடியை உணவாக எப்படி சாப்பிடுவது?

சீந்தில்கொடி கிழங்கை நெய் வடிவில் காய்ச்சி, உணவு வகைகளில் சேர்த்துவர, பசித்தீ அதிகரித்து வயிற்று மந்தம் நீங்கும்.

தகிக்கும் தாகத்தையும் கொதிக்கும் உடல் வெப்பத்தையும் குறைக்க, நெற்பொரியோடு சம அளவு சீந்தில் சேர்த்து, தண்ணீரி லிட்டுக் கொதிக்கவைத்த இதமான பானத்தைப் பருகலாம்.

இதன் கிழங்குக் குடிநீர், சுரத்தைக் குறைக்கும் நேரடி மருந்து. 

செரிமானக் கருவிகள் சோர்வடைந்து, பசியும் ருசியும் இல்லாமல் அவதியுறும் போது, காய்ந்த சீந்தில் கொடி,மற்றும் லவங்கப்பட்டையை மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி, ‘ஊறல்-பானத்தை’த் தயாரித்து,செரிமானத்துக்கு உற்சாகமூட்டலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு சீந்தில்  மருந்தாக எப்படி பயன் படுகிறது?

சீந்தில்சர்க்கரை: சீந்தில் கொடியிலிருந்து நுணுக்கமாக உருவாக்கப்படும் ‘சீந்தில் சர்க்கரை’ (சீந்தில் மா) எனும் சித்த மருந்து, தோல் நோய் முதல் நீரிழிவு நோய்வரை கட்டுப்படுத்தும் திறமை வாய்ந்தது.

சீந்தில் இன்சுலின் சுரப்பை அதிகரித்து, அளவுக்கு அதிகமாக குளுக்கோஸ் உற்பத்தியாகும் காரணிகளைத் தடுத்து, ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தோல் நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் சித்த மருந்துகளில், சீந்தில் சர்க்கரையின் சேர்மானம் மருந்தை மேலும் வீரியமாக்கும்.

வெண்ணிறத்துடன் கைப்புச் சுவையை உணர்த்தும் சீந்தில் மா, ஆரம்ப நிலை ஈரல் பிரச்சினைகளுக்கான மருந்தும்கூட!

எலும்புகளுக்கு ஊட்டத்தைக் கொடுப்பதோடு, எலும்புகளின் திண்மையை அதிகரித்து முதிர்ந்த வயதிலும் வீறுநடை போட சீந்தில் துணை நிற்கிறது.

புற்றுநோய் செல்களுக்கு எதிராகச் செயல்பட்டு, புற்று நோயின் அதிகாரத்தைக் குறைக்கும்.

தனது எதிர்-ஆக்ஸிகரணி செயல்பாடு மூலம், நமது உடல் உறுப்புகளின் செயல்திறனைப் பன்மடங்கு அதிகரிக்கிறது.

சீந்திலலை வீட்டு மருந்தாக எப்படி பயன்படுத்தலாம்?

உள்ளங்கை, பாதங்களில் தோன்றும் எரிச்சலுக்கு, சீந்தில் சூரணத்தைத் தண்ணீரிலிட்டுப் பருக, எரிச்சலுக்கு நிவாரணம் கிடைக்கும்.

தலைபாரம், மூக்கில் நீர்வடிதல், அடுக்குத் தும்மல் போன்ற பீனச (சைனசைடிஸ்) குறிகுணங்களுக்குச் சீந்தில் சூரணம் சிறப்பான பலன் அளிக்கும்.

சீந்தில் துணைகொண்டு தயாரிக்கப்படும் ‘சீந்தில்-சுக்கு பால் கஷாயம்’, வாத நோய்களுக்கான மருத்துவப் பொக்கிஷம்.

சீந்தில், இஞ்சியின் நுண்கூறுகள், சித்த மருத்துவத்தின் கூட்டு மருத்துவத் தத்துவத்துக்கு ஆதாரம். 

மெலிந்த உடலுக்கு வலுவைக் கொடுக்க, சீந்தில் சூரணத்தோடு பூனைக்காலிச் சூரணத்தைச் சிறிதளவு சேர்த்துப் பாலில் கலந்து சாப்பிடலாம்.

நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க, இதன் கிழங்குத் துண்டுகளை மாலையாக்கி அணிந்துகொள்ளும் பழக்கமும் சில பகுதிகளில் இருக்கிறது.

இளம் சீந்தில் தண்டைவிட, கசப்பு ஊறிய முற்றிய சீந்தில் கொடிக்கே மருத்துவக் குணங்கள் அதிகம். 

முதிர்ந்த சீந்தில் கொடியைக் காயவைத்துப் பொடித்து, கற்கண்டுத் தூள் சேர்த்து, பாலில் கலந்து பருகுவது உடலை உரமாக்கி, ஆயுளை அதிகரிப்பதற்கான டானிக்.

பனிக்காலத்தில் ஏற்படும் சளி, தலைபாரத்துக்குச் சீந்தில் சாறு, கறிவேப்பிலைச் சாறு, கற்பூரவள்ளிச் சாறு, மிளகுத் தூள் ஆகியவற்றைச் சேர்த்து மருந்தாகப் பயன்படுத்தலாம்.

சீந்தில் கொடி, பொடுதலை, வல்லாரை, திப்பிலி போன்ற மூலிகைகளின் சாற்றைச் சுண்டச் செய்து தயாரிக்கப்படும் ‘சுரச’ வகை மருந்து குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தத்தைக் குணப்படுத்துகிறது.

இதன் புகையைச் சுவாசிக்கப் பல நோய்கள் குறையும் என்பதால், காய்ந்த சீந்தில் கொடியைப் புகை போடும் வழக்கம் கிராமங்களில் உண்டு.

அமிர்தத்திற்கு நிகரான இந்த சீந்தில் கொடியை ஹோமியோபதி மருத்துவத்தில்  சீந்தில் கொடியின் தாவரவியல் பெயரான ‘டினோஸ்போரா கார்டிஃபோலியா’ 
(Tinospora cordifolia) என்ற பெயரில் கிடைக்கிறது.

ஹோமியோபதி மருத்துவத்தில் Tinospora cordifolia என்ற பெயரில் கிடைக்கும் இந்த மருந்து ஆண்களின் அதிக பாலுணர்வு செய்கையினால் ஏற்பட்ட விந்து இழப்பிற்கும்,அதனால் ஏற்பட்ட
கடுமையான பலவீனத்தையும் நீக்குகிறது.

விட்டு,விட்டு தாக்கும் காய்ச்சல்,
மஞ்சள் காமாலை,மண்ணீரல் வேக்காடு,தோல் உபாதைகள்,
குஷ்டம்,மூட்டு வேக்காடு,வெள்ளை படுதல்,இரண்டாம் நிலை 
மேகக்கிரந்தியால் பிறப்புறுப்பில் ஏற்படும் உபாதைகள்,சிறுநீரக உபாதைகளுக்கு ஹோமியோபதி மருத்துவத்தில் இது பயன்படுகிறது.

ஹோமியோபதி மருத்துவத்தில் தாய்த்திரவம்(Q),மற்றும் 2x,3x&6x ஆகிய குறைந்த வீரியங்களில் பயன்படுகிறது. 

எனவே சீந்தில்,உடல் நலத்துக்கான தூண்டில் எனப்படுகிறது.

ஆன்மீகத்தில் சீந்தில் கொடியின் பயன்கள்:

இந்த உலகத்தில் உள்ள மனிதர்களின் சகல விருப்பங்களும் நிறைவேறி, அவர்கள் சந்தோஷமாக வாழவேண்டும் என்பதற்காக நாரத மகரிஷியால்  அருளப்பட்ட மதனகோபால மந்திரம் ஆறு மந்திரங்களைக் கொண்டது.

இந்த மந்த்ரங்களில் முதல் மந்திரமாக இருப்பது.

ஓம் கோபீஜன வல்லபாயை ஸ்வாஹா என்ற ஒப்பற்ற மந்திரமாகும்.

இந்த மந்திரத்தை ஒரு லட்சம் ஜபம் செய்து சீந்தில் கொடியை ஆஹுதி செய்து ஹோமம் செய்தால் சகல பிணிகளும் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும்.

இந்த சீந்தில் கொடியின் காய்ந்த வேர்களை ஹோமத்தில் இட்டால் சர்வ தேவதா வசியம் கிடைப்பதுடன்,
இந்த ஹோமப்புகையை சுவாசிப்பவர்களின் ஆயுள் அதிகரிக்கும். 

அமிர்தவல்லி எனப்படும் சீந்தில் கொடி மூலிகை.

என்ற அமிர்தவல்லிமூலிகை.

 https://youtu.be/fZbetGDHSj8

 https://youtu.be/DYr_AkRX6iQ

 (What is Amritham? A collection of posts I read about Amirthavalli at a dental website address when searching on the internet)

 To those who ask, 'Is there any miracle that prolongs life?'

 Amritam is said to prolong health and longevity, as well as enhance longevity and charm.

 The Lord has created the flag in Sindh so that we should have all the magnificence of that nectar available in one herbal vine.

 That is why the flag in Sindh is called Amirthakodi, Amirthavalli.

 Even in old age, when suffering from chronic diseases, enough to restore the health of the body!

 Seenthil Kodi, an ‘herbal marketer’ who lives through many seasons, creates many marketers in the human race.

 The reason for the name in Sindh: Many names like Somavalli, Amirthavalli, Amirthai, Kundali, Amirthakodi
 கொண்டு சீந்தில்.

 ‘Valli’ means ‘flag’ and Amirtha ‘Valli’ is the name given to the flag type snail.

 The name 'Amrita' is derived from the word 'Amritam' which means 'immortality'.

 There is also a species called Porcinthil.

 Flag mark on the seal:

 It carries heart-shaped leaves and has a sessile flag.

 Regardless of the type of flag, the flag exemplifies the strength of the flag at the final stage

Comments

Post a Comment

Popular posts from this blog

பாவம் புண்ணியம்

திருமாங்கல்யம்

நேர்மறை சக்தி