ஆதித்தியன் சூரியன் Sun Solar
சூர்யம் சுந்தர லோகநாத மம்ருதம்
வேதாந்த ஸாரம் சிவம்
ஞானம் பிரம்ம மாயம் சுரேச மாமலம்
லோகைக சித்தஸ்வயம்
இந்த்ராதித்ய நராதிபம் சுரகுரும்
த்ரைலோக்ய சூடாமணிம்
பிரம்மா விஷ்ணு சிவஸ்வரூப ஹ்ருதயம்
வந்தே ஸதா பாஸ்கரம்
ஞாயிற்றுக்கிழமை சூரியவழிபாடு செய்ய நலம்.
சூரியன் பிரத்யட்ச மான தெய்வம். எல்லாருமே கண்களால் கண்டு வணங்கக்கூடிய தெய்வம். சூரிய வழிபாடு அனைவருக்கும் பொதுவான வழிபாடு. உலக உயிர்கள் அனைத்தையும் தன் ஒளியினால் வாழவைப்பவர் சூரியன்.
அபயம் அல்லது எதற்கும் அஞ்சாத தன்மையை அளிப்பவர் நாராயணன் என்பது சித்தாந்தம். உயிரினங் களைஅச்சத்திலிருந்து காப்பவரே ஆதித்யன் என்ற சூரிய பகவான். இருள் சூழ்ந்திருக்கும்போது எல்லா உயிர்கள் அச்சத்தினால் மருண்டிருக்கின்றன. சூரியன் உதித்தவுடன் ஒளியினால் அச்சங்கள் தவிர்க்கப்படுகின்றன. இதனாலயே சூரிய நாராயணன் என்று பெயர் விளங்குகிறது.
ஆதிசங்கரர் ஆறுவித முக்கிய தெய்வங்களாகிய கணபதி, சுப்ரமணியர், அம்பிகை, சிவன், விஷ்ணு, சூரியன் என்று உபாசனா மார்க்கத்தை நாம் எல்லாரும் உய்யும் பொருட்டு உபதேசித்தருளினார். நமக்கு எந்த தெய்வத்திடம் ஈடுபாடு ஏற்படுகிறதோ அந்த தெய்வத்தையே துதிக்கலாம். முறையாகத் துதித்தால் எந்த தெய்வமும் அருள்புரியும் என்று நிலைநாட்டினார்.
சூரியனை விச்வரூப விராட்புருஷனாகிய விஷ்ணுவின் கண்களிலிருந்து தோன்றி வந்தவர் என்று சொல் வார்கள். அந்த ஆதிபுருஷனுடைய நேத்திரம் சூரியன் என போற்றப் படுவதாலேயே சூரியன் நமது கண்களுக்கும் அதிஷ்டான தெய்வமாக இருக்கிறார்.
சூரியன் காலையில் ரிக் வேத சொரூபியாகவும் மதியத்தில் யஜுர் வேத சொரூபியாகவும் மாலை வேளையில் சாம வேத சொரூபியாகவும் திகழ்கிறான்.
“ஆதித்யானாம் அஹம் விஷ்ணு’ என்கிறார் பகவத்கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர். இதன் அர்த்தம் “நானே சூரியனாகத் திகழ்கிறேன் என்பதாகும்.
சூரியன், ஒவ்வொரு பருவ காலத்திலும் ஒவ்வொரு நிறத்தில் காட்சி தருகிறார். வசந்த காலத்தில் தங்க நிறத்திலும், வெயில் காலத்தில் செண்பகப்பூ நிறத்திலும், மழைக்காலத்தில் வெண்மை நிறத்திலும், கார்காலத்தில் கருமை நிறத்திலும், முன்பனிக் காலத்தில், தாமரை நிறத்திலும், பின்பனிக் காலத்தில் சிவப்பு நிறத்திலும் விளங்குவதாக வேதங் கள் கூறுகின்றன.
சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய “காலம்‘ என்ற ஒற்றைச் சக்கர தேரில் பவனி வருபவராக புராணங்கள் கூறுகின்றன. இந்த ரதத்தை ரதசப்தமியன்று விஷ்ணு சூரியனுக்கு அளித்தார். ரத சாரதியாக காசியப முனிவரின் மகனான அருணன் விளங்குகிறார். இவருக்கு இடுப்புக்குக் கீழே அங்கங்கள் கிடையாது. வைரோஜன யோகத்தில் ரதத்தைச் செலுத்தி, சூரிய பகவானுக்கு உறுதுணையாக இருக்கிறார்.
சூரிய ரதத்தின் ஏழு குதிரைகளை காயத்ரி, பிருகதி, உஷ்ணிக், ஜகதி, திருஷ்டுப், அனுஷ்டுப், பங்கிதி என்று அழைப்பர். இவை, வாரத்தின் ஏழு நாட்களைக் குறிக்கின்றன.
ஸ்ரீ மகாவிஷ்ணுவைப் போல் சூரியனுக்கு சங்கும், சக்கரமும் உண்டு. அதனால் வைஷ் ணவர்கள் சூரியனை “சூரியநாராயணன்’ என்று போற்றுகின்றனர்.
சிவ ஆகமங்களில் சூரிய மண்டலத்தின் நடுவே சிவபெருமான் உறைந்திருப்பதாக கூறுகின்றன. சூரியன் சிவனின் அஷ்டமூர்த்தங்களில் ஒருவராகவும், வலது கண்ணாகவும் இருக்கிறார். அதனால் தான் சைவர்கள் “சிவசூரியன்’ என்று போற்றுகின்றனர்.
சூரியனின் தேர் தெற்கில் பயணிக்கும் காலத்தை தட்சிணாயனம் என்றும், வடக்கு நோக்கி பயணிக்கும் காலத்தை உத்ராயணம் என்றும் கூறுவர்.
சௌரம் என்ற சூரிய வழிபாட்டில் காயத்ரி ஜெபம் முக்கியமானது. வேதங்களில் சூரிய வணக்கமும் அடங்கியுள்ளது. உடல் ஆரோக் கியத்திற்காகவும், கண் பார்வை சிறப்பாக இருக்கவும் சூரியனை வழிபடுகிறார்கள். ஞானம் வேண்டியும் வழிபடலாம். ஆஞ்சனேய சுவாமி சூரியனுடன் சஞ்சரித்துக் கொண்டே ஞானோபதேசம் பெற்று "நவவியாகரண பண்டிதன்' என்ற பெருமையைப் பெற்றார். மகரிஷி யாக்ஞ வல்கியர் சூரியனை உபாசித்து சுக்ல யஜுர் வேதத் தைக் கற்றார் என்பதை அறிய முடிகிறது. திரேதாயுகத்தில் சூரியனைதான் முதன்மை தெய்வமாக வழிபட்டு வந்தார்கள்.
சூரியனுக்கென்று சிறப்புப் பெற்ற ஆலயங்களும் இருக்கின்றன. கும்பகோணத் திற்கு அருகிலுள்ள சூரியனார் கோவில் மிகவும் விசேஷமானது.
நம் ஆரோக்கியத்துக்கும் அதி பதியாக இருப்பவர் சூரிய பகவான்! ‘சுகத்துக்கு சூரிய பகவானை வணங்கு’ என்று மந்திர சாஸ்திரங்கள் சொல்கின்றன. காலை 7 மணிக்குள்ளும் மாலை 5 மணி முதல் 6 மணிக்குள்ளும் சூரிய வெளிச்சத்தில், சிறிது நல் லெண்ணெயை உடல் முழுவ தும் தடவிக் கொண்டு, ஒரு மணி நேரம் அமர்ந்திருந்தால் நெடுநாட்களாக நம்மை விட்டு விலகாத நோய்கள் குணமாகி விடும்.
சூரிய காயத்ரி :
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்
காயத்ரி மந்திரம் 2
ஓம் பாஸ்கராய வித்மஹே
திவாகராய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்
சூரிய பகவான் மந்திரம்
காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும்
பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும்
வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த
தேசிகா எனைரட்சிப்பாய் சேங்கதிரவனே போற்றி
தினமும் காலையில் நீராடி விட்டு கிழக்கு திசை பார்த்து நின்று சூரியனைப் பகவானை பார்த்து 10 முறை சொல்ல அனைத்து நோய்களும் தீர்ந்து உடல் மற்றும் மனோபலம் பெறலாம்.
சூரிய மந்திரம் நம் மனதை ஒழுங்கு படுத்தி அமைதியை யும், நற்சிந்தனையையும் தரும். அதே போல் சூரிய நமஸ்காரம் நம் உடலை வளப்படுத்தி, எந்த நோயிலிருந்தும் காக்கும் மிக உன்னதத்தைத் தரக் கூடியதாக இருக்கும்.
யார் நம்முடைய அறிவைத் தூண்டுகிறாரோ, அந்த சுடர்க் கடவுளின் மேலான ஒளியை தியானிப்போமாக' என்பது சூரிய காயத்ரியின் பொருள். சூரியனை வழிபட்டு ஞானமும் ஆரோக்கியமும் பெறுவோம்.
நன்றி
இனிய வணக்கம்
வாழ்க வளமுடன்்நலமுடன்
Worship sun on Sunday, and everyday.a
The sun is the deity of devotion. A deity that can be seen and worshiped by all eyes. Sun worship is a common worship for all. The sun is the source of all life on earth.
The ideology is that Narayanan gives fearlessness or fearlessness to anything. Adityan, the sun lord, is the protector of living beings from fear. When darkness envelops all living beings are drugged by fear. Fears are avoided by light as soon as the sun rises. Hence the name Surya Narayanan.
Aadhisankar preached the Upasana religion that we should all worship the six main deities Ganapati, Subramanian, Ambika, Shiva, Vishnu and the Sun. We can praise the deity with which we are involved. He maintained that any deity would be blessed if praised properly.
The sun is said to have appeared from the eyes of Vishnu, the cosmic giant. The sun is the auspicious deity for our eyes because the eye of that ancestor is worshiped as the sun.
The sun is Rig Veda Soroba in the morning, Yajur Veda Soroba in the afternoon and Sama Veda Soroba in the evening.
In the Bhagavad Gita, Sri Krishna says, "Adityanam aham Vishnu." It means, "I am the sun."
The sun shines in every color every season. The Vedas say that it is golden in spring, red in summer, white in rain, dark in autumn, lotus in early winter and red in late summer.
Legend has it that the sun floated in a single-wheeled chariot called "Kalam" with seven horses. This chariot was given to the sun by Vishnu on Rathasapthami. The chariot driver is Arun, the son of Sage Kasiyapa. He has no limbs below the waist. He pays homage to the sun lord by chariot-riding in Virojana Yoga.
The seven horses of the chariot of the sun are called Gayatri, Brigadier, Ushnik, Jagathy, Thrushtup, Anushtup, Pangithi. These represent the seven days of the week.
Like Sri Mahavishnu, the sun has a cone and a wheel. That is why Vaishnavism praises the sun as 'Suriyanarayanan'.
Shiva agamas say that Lord Shiva is frozen in the middle of the solar system. The sun is one of the Ashtamurtis of Shiva and is the right eye. That is why the Sikhs worship the 'Sivasuriyan'.
The time when the chariot of the sun travels south is called Dakshinayanam and the time it travels towards the north is called Utrayanam.
Gayatri prayer is important in the sun worship of Sauram. The sun worship is also included in the Vedas. They worship the sun for good health and good eyesight. Wisdom can also be worshiped. Anjaneya Swami received enlightenment while traveling with the sun and became known as the 'Navaviyakarana Pandit'.
There are also temples dedicated to the sun. The Sun Temple near Kumbakonam is very special.
The sun god is the one who is most responsible for our health! The mantras say ‘Worship the sun lord for happiness’. In the sunlight between 7 am and 5 pm to 6 pm, apply a little good oil all over the body and if you sit for an hour, the diseases that will not leave us for a long time will be cured.
Surya Gayatri:
Om asvatvajaya vidmahe pasa hastaya dimahi
Tanno Suryap Prasodayat
Gayatri Mantra2
Om Bhaskaraya Vidmahe
Divakaraya Theemahi
Tanno Suryah Prasodayat
The magic of the sun lord
Cassini is the radiance that removes darkness everywhere
Pumpkin is universally admired and gives pleasure
Mahagiri came to the right on the chariot of Vasi seven
Desika enairatcippai sangathiravane potri
Take a bath every morning and stand facing east and look at the sun god 10 times to get rid of all ailments and gain physical and mental strength.
The solar mantra regulates our mind and gives peace and goodness. As well as sun salutation will enrich our body and give the highest quality of protection from any disease.
Let us meditate on the supreme light of that flame god who inspires our knowledge 'is the meaning of Surya Gayatri. We will worship the sun and gain wisdom and health.
Panchayudanam: Adhithyam, Ambikam, vishnum, gananathancha, Maheshwaram.In this why Adhithyam because he removes darkness and in the form of nature. Suyanarayanan is the God to be worshipped before starting pithru karyam
Comments
Post a Comment