எண்ணெய்க் குளியல்
https://www.youtube.com/watch?v=Fwwb8dkybR0 https://www.youtube.com/watch?v=b49vYXEhC4w https://www.youtube.com/watch?v=JzDIFMgwaL4&t=11s https://www.youtube.com/watch?v=Tb1LJW8qm5M எண்ணெய் தேய்த்துக் குளிப்பது எப்படி அவசியமோ, அதேபோல முறைப்படிக் குளிப்பதும் அவசியமானது. உதாரணமாக, எண்ணெயைத் தலையில் தேய்த்ததும் உடனடியாக ஷாம்பூவால் தலையை அலசுவது என்பது எண்ணெய்க் குளியலே அல்ல. அதற்கென ஒரு சில வரையறைகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றினால் மட்டுமே முழுப் பலனை அடையமுடியும். எண்ணெய்க் குளியல்’ என்றதும் தீபாவளிப் பண்டிகைதான் நம் நினைவுக்கு வரும். ஆண்டுக்கு ஒரு முறை செய்யவேண்டிய குளியல் அல்ல இது. ‘வாரம் ஒரு முறை பின்பற்றவேண்டிய முக்கிய வாழ்க்கை நெறி’ என்கிறது சித்த மருத்துவம். நம் பாரம்பர்ய வாழ்வியலில் ஓர் அங்கமாகவே இருந்துவந்த இந்த வழக்கம், இன்றைக்கு வெறும் தீபாவளிச் சடங்காக மாறிவிட்டது. உடலை நோய் அணுகாமல் காத்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் பின்பற்றிவந்த குளியல் முறையில் எண்ணெய்க் குளியல் இன்றைக்கு வழக்கொழிந்துவிட்டது. நம் முன்னோர், நோய் உடலை அண்டாமல் காக்க ஆரோக்கியத்தை மேம்படுத்த எளிய வழிக...