மூங்கில் அரிசி Bamboo rice

 மருத்துவம் குணம் நிறைந்த மூங்கில் அரிசி

https://www.youtube.com/watch?v=W6OQ3Twn-og

https://www.youtube.com/watch?v=jMjLXwGXjh4

https://www.youtube.com/watch?v=teJgOAQMEf4

https://www.youtube.com/watch?v=kervqIuixMU

காடுகளில் விளைகின்ற 40 - 60 வயதான மூங்கில் மரங்களில் உள்ள பூப்பகுதியில் இருந்து சேர்க்கப்படும் விதைகளையே மூங்கில் அரிசி என்று அழைக்கப்படுகிறது. இது பார்ப்பதற்கு நெல் போலவே இருக்கும். இந்த மூங்கில் அரிசியானது நமது  உடலுக்கு ஏராளமான ஊட்டச்சத்தை வழங்குகிறது.

காடுகளில் வாழும் பழங்குடி மக்களின் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணமான உணவு வகையில் இந்த மூங்கில் அரிசியும் முக்கியமான ஒன்று.

மூங்கிலரிசியைச் சமைத்து சாப்பிட்டு வர உடல் இறுகி உடல் திடம் பெரும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதால் நோய்கள் நம்மை அண்டாது.

சர்க்கரை நோயால் கட்டான உடலை இழந்தவர்கள் கூட சீரான உடலமைப்பை பெற மூங்கில் அரிசி உதவும். மக்கட்பேறு உருவாக்குவதில் கூட முக்கிய பங்கு வகிக்கிறது. பழங்குடி மற்றும் மலைவாழ் மக்களில் மக்கட்பேறு இல்லாமல் யாரும் இருக்க மாட்டார்கள் இதற்கு மூங்கில்அரிசியும் ஒரு காரணம் .

மூட்டுவலியை குணமாக்கும் மூங்கில் அரிசி கஞ்சி

பத்துப் படிகள் ஏறினாலே, மூச்சு வாங்குகிறது; முட்டி வலிக்கிறது. ஆனால், நம் முன்னோர்கள், பல மைல் தூரங்களை நடை பயணமாகவே கடந்தவர்கள். உரமேறிய அந்த உடல்வாகிற்கான அடிப்படைக் காரணம் சத்துமிக்க உணவுப் பழக்கம்தான். மறந்துபோன அந்த மருத்துவ உணவு.

👉 மூங்கில் அரிசி நார்ச்சத்து மிக்கது.

👉 உடல் வலிமை பெறும்.

👉 சர்க்கரை அளவை குறைக்கும்.

👉 எலும்பை உறுதியாக்கும்.

👉 நரம்புத் தளர்ச்சியை சீர் செய்யும்.

1. சர்க்கரை நோயால் கட்டான உடலை இழந்து சக்கையாகி போனவர்களை, மாறும்படியும் சீரான உடல் அமைப்பை பெற செய்யும் இந்த மூங்கில் அரிசி.

2. இந்த மூங்கில் அரிசியில் தினமும் கஞ்சி வைத்து சாப்பிட்டு வர மூட்டு வலி, முட்டியில் நீர் கோர்த்துக்கொள்ளுதல், முதுகு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி, உடல் பலவீனம் போன்ற பிரச்சனைகள் சரியாகிவிடும்.

3. உடல் எடை குறைய, தொப்பை குறைய மூங்கில் அரிசியை வாரத்தில் இரண்டு முறை பொங்கலாகவோ அல்லது கஞ்சியாகவோ செய்து சாப்பிட்டு வர உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்படுகிது. இதனால் உடல் எடை மற்றும் தொப்பை குறைய ஆரம்பிக்கும்.

4. குழந்தையின்மை பிரச்சனை உள்ளவர்கள் இந்த மூங்கில் அரிசியை தினமும் காலையில் கஞ்சியாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர இந்த குழந்தையினமை பிரச்சனை சரியாகும்.

5. இந்த மூங்கில் அரிசியானது கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வைட்டமின் குறைபாடுகளை நீக்கும் தன்மை உடையது. அதனால் கர்ப்ப கால பெண்கள் விரும்பும் வகையிலான மூங்கில் அரிசி உணவுகளை செய்து சாப்பிடலாம்.

6. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கும் சக்தி மூங்கில் அரிசிக்கு உள்ளது. இந்த மூங்கில் அரிசியினை சாப்பிட்டு வந்தால் கழுத்து வலி, இடுப்பு வலி, போன்றவை சரியாகும். அதுமட்டும் இல்லாமல் உடல் வலிமை அடையும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும், எலும்பை உறுதியாக்கும், நரம்புத் தளர்ச்சியை சரி செய்யும்.

Comments

Popular posts from this blog

பாவம் புண்ணியம்

திருமாங்கல்யம்

நேர்மறை சக்தி