தொட்டால் சிணுங்கி Touch me not plant


https://youtu.be/7FlOPkLZIRs

https://youtu.be/UsnDbE_OkEA

https://www.youtube.com/watch?v=igvqmLEGYZ4

https://youtu.be/BSE2_6ZQIfk




தொட்டால் சிணுங்கி, தமிழ் நாட்டில் எல்லா இடங்களிலும் ஈரப்பதமான இடங்களில் தானே வளரக் கூடியது. இது தரையில் படர்ந்து 5 அடி வரை படரும் அதே சமயம் இது 60 செ.மீ. உயரமும் இருக்கும். சிறு செடி வகையைச் சார்ந்தது. ஆற்று ஓரங்களில் அதிகமாகக் காணப்படும். சிறு முட்கள் இருக்கும். இலைகள் ஜோடியாக எதிர் அடுக்கில் கூட்டாக இருக்கும். ஒவ்வொரு கிளைக்கும் சுமார் 10-25 எதிர் அடுக்கு இலைகள் உள் நோக்கி இருக்கும். இலைகள் இடையில் ஊதா நிறப் பூக்கள் மேலே சிவப்பாகவும் அடியில் ஊதா நிறத்திலும் இருக்கும்.

பூவில் குச்சிகள் ஒரு செ.மீ. நீளத்தில் சிலிர்த்துள்ளது போல் இருக்கும். காய்கள் 2.5 மி.மி. நீளத்தில் இருக்கும். பூக்கள் காற்று மூலமும் பூச்சிகள் மூலமும் மகரந்தச் சேர்க்கை ஏற்படும். இதன் இலைகள் மாலைக்கு மேல் உட்பக்கமாக மூடிக்கொள்ளும். சூரிய உதையத்தின் போது மறுபடியும் தெளிந்து கொள்ளும். மனிதர்கள் தொட்டாலும், அதிர்வு ஏற்பட்டாலும் தொடர்ச்சியாக இலைகள் மூடிக்கொள்ளும். இதனை ஆங்கிலத்தில் ‘Touch-me-not’  என்றும் சொல்வார்கள். மூடிய இலைகள் பகலில் அரை மணி நேரம் கடந்து விரிந்து கொள்ளும். இதன் பூர்வீகம் வட அமரிக்கா மற்றும் மத்திய அமரிக்கா. பின் இது தெற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா, பசிபிக் தீவுகள், ஆஸ்திரேலியா, நைஜீரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் பரவியது. இது விதை மூலம் இனப் பெருக்கும் செய்யப்படுகிறது

வீட்டில் இந்த 1 செடியுடன் சேர்த்து வைத்தால் இன்னும் அதிர்ஷ்டம் பெருகும்.

வீட்டில் நல்ல ஆற்றல்கள் பெருக பசுமையான செடி வகைகளை வளர்க்க வேண்டியது அவசியமாகும். உங்களிடம் எவ்வளவு இடம் இருக்கிறதோ! அந்த இடத்திற்கு தகுந்தார் போல் ஏதாவது ஒரு செடி வகைகளை உங்கள் கண்களுக்கு குளிர்ச்சியாக, பசுமையாக வளர்த்து வாருங்கள். அந்த வீட்டில் நிச்சயம் நேர்மறை ஆற்றல்கள், நல்ல சிந்தனைகள் மேலோங்கி காணப்படும். அவ்வகையில் தெய்வீக செடியாக விளங்கும் துளசி செடியை எல்லோருடைய வீட்டிலும் வளர்த்து வருவது வாடிக்கை. அத்தகைய துளசியுடன் எதை சேர்த்து வைத்தால் யோகம்.

துளசி செடியை வீட்டில் வளர்ப்பதால் சகல பாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. துளசியில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது. துளசி செடியை வழிபடுபவர்களுக்கு நிம்மதியும், செல்வமும் எப்போதும் நிறைந்து இருக்கும். அவ்வகையில் துளசி செடியுடன் இந்த ஒரு செடியையும் சேர்த்து வளர்த்து வந்தால் வீட்டில் நல்ல ஆற்றல்கள் பெருகும் என்பது ஐதீகம். துளசியில் கற்பூரவள்ளி என்று கூறப்படும் துளசியையும் வீட்டில் வளர்ப்பது ராஜ யோகத்தை தரும். தினமும் ஒரு கற்பூரவள்ளி இலையை மென்று சாப்பிடுபவர்களுக்கு சளி தொல்லை என்பதே ஏற்படாது. துளசி மற்றும் கற்பூரவள்ளி இந்த இரண்டு செடிகளையும் வீட்டில் தாராளமாக அனைவரும் வளர்த்து வரலாம். மேலும் துளசியுடன் வளர்க்க வேண்டிய அற்புதமான செடி வகை ஒன்று உள்ளது. அதை துளசிச் செடியுடன் சேர்த்து அல்லது பக்கத்தில் வைத்து வளர்த்து வந்தால் வீட்டில் ஏற்படும் சண்டை சச்சரவுகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

முந்தைய காலத்தில் இந்தச் செடி வகை அனைவருக்கும் பிடித்தமான செடி வகையாக வீட்டில் வளர்த்து வந்தனர். ஆனால் இப்போது இந்த செடியை பலரும் அபூர்வமாகத்தான் பார்த்து வருகின்றனர். குழந்தைகள் அதிகம் விரும்பும் இந்தச் செடியை துளசியுடன் சேர்த்து வளர்த்தால் கிடைக்கும் நன்மைகள் சொல்லில் அடங்காதவை. துளசியுடன் இந்த செடியை வளர்த்தால் வீட்டில் நல்ல ஆற்றல் பெருகும். உங்களுடைய சிந்தனைகள் தெளிவாகும்.

சிறுவயதில் அனைவரும் அதிசயமாக வியந்து பார்த்த ஒரு செடி வகை என்றால் அது தொட்டாசினுங்கி. இதன் இலைகளைத் தொட்டால் அது நானப்பட்டு சுருங்கி விடுமாம். அதனை பார்ப்பதற்கு நமக்கு மெய் சிலிர்க்கும் வண்ணம் இருக்கும். குழந்தைகள் இதனை அடிக்கடி தொட்டுப் பார்த்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். இந்தச் செடி வகை இப்போது வீட்டில் வளர்ப்பது அரிதாகிவிட்டது. உண்மையில் தொட்டாசினுங்கியும் தெய்வீக மூலிகை வகை தான்.

தொட்டாசினுங்கி துளசியுடன் சேர்த்து வளர்த்தால் நிறைய நன்மைகள் உண்டாகும். இதனை தனித்தனியாக வளர்த்தாலும், அருகருகே வைத்து வளர்த்து வாருங்கள். நல்ல பலன்கள் நிச்சயம் கிடைக்கும். வெற்றிலையுடன் ஏதாவது ஒரு செடி வகை சேர்த்து வளர்த்தால் நல்லது நடக்கும். தனியாக வளர்ப்பது அவ்வளவு நல்லதல்ல என்பார்கள். அதுபோல துளசியுடன் இணைந்த தொட்டாசினுங்கி நேர்மறை ஆற்றல் வெளிப்படுத்தும் தன்மை கொண்டுள்ளது. சிறிய தொட்டியில் சிறியதாக வளர்த்தாலே போதும். புதர் போல் படர்ந்து வளர விட்டுவிடாதீர்கள் அடிக்கடி வெட்டிவிட்டு சிறியதாக அழகாக வளர்த்து வந்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

தொட்டால் சிணுங்கி செடியின் அற்புத மருத்துவ பயன்கள்.

‘நமஸ்காரி’ என்ற இந்த மூலிகை காந்த சக்தி உடையது. தொடுகின்ற போது அதனுடைய சக்தி மனிதனுள் மின்சாரம் போல் பாயும். 48 நாள் தவறாது தொட்டு வந்தால் உள் ஆற்றல் பெருகுமாம். 
தொட்டால் சிணுங்கி செடியின் வேரையும் இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணியில் சலித்து வைக்கவும், இந்த சூரணம் 15  கிராம் பசும்பாலில் குடிக்க சிறு நீர் பற்றிய நோய்கள், மூலச்சூடு, ஆசனக்கடுப்பு தீரும். 

உடல் சூடு பிடித்தால் சிறுநீர்த் தாரை எரியும். இதற்கு இதன் இலையை அரைத்து 5-6 நாள் 10 கிராம் காலை தயிரில் சாப்பிட வேண்டும்.  ஆண்மை பெருக இரவு பாலில் 15 கிராம் கலந்து சாப்பிட வேண்டும். சிறுநீர் எரிச்சல் குணமாகும். 
தொட்டால் சிணுங்கி இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். உடல் குளிர்ச்சியாகும். வயிற்றுப்புண்ணும் ஆறும்.
பெண்களுக்கு ஏற்படும் உதிரப் பெருக்கு என்கின்ற பெரும்பாடு நோய் தீரவேண்டுமானால் தொட்டால் சுருங்கி இலையைப் பறித்து சுத்தம் செய்து, அவ்விலையோடு தேவையான அளவில் சிறுவெங்காயத்தையும், சீரகத்தையும் சேர்த்து அரைத்து பசு மோரில் கலந்து பெண்கள்  அருந்த நோய் குணமாகும்.
குழிப்புண் குணமாக இவ்விலையைப் பறித்து வந்து சுத்தம் செய்து, உள்ளங்கையில் வைத்துக் கசக்கி, அதில் இருந்து வரும் சாற்றை உடலில் ஏற்பட்டுள்ள குழிப்பண்ணீல் விடுவதோடு கொஞ்சம் இலையையும் அந்தப்புண்ணின் மீது கசக்கி வைத்து தூய்மையான துணியால் கட்டி  வந்தால் சில நாட்களிலேயே குழிப்புண் குணமாகும்.
மேனியில் ஏற்படும் படை, தேமல் போன்ற நோய்கள் நீண்ட நாள் இருந்து தொல்லை கொடுக்கும் வேளையில் இவ்விலையைப் பறித்து வந்து,  அதில் சாறு எடுத்து அதை நோய் மீது தடவ விரைவில் குணமாகும்.

Comments

Popular posts from this blog

தீபாவளி பலஹாரங்கள் Deepavali snacks

ஆதித்தியன் சூரியன் Sun Solar

60s, 70s and 80s Brain skill