உணவே மருந்து மருந்தே உணவு

 உணவே மருந்து   மருந்தே உணவு..!

https://youtu.be/3OG9kg9RlF4

https://www.youtube.com/watch?v=DazypwsFtag

https://www.youtube.com/watch?v=KRRtExKR-d0

https://www.youtube.com/watch?v=23QTSB-4wtk

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்.

நோயை அறிந்து, நோயின் மூலகாரணத்தை தெரிந்து கொண்டு நோயைத் தீர்க்கின்ற வழிமுறைகளை ஆராய்ந்து அதன் வழியில் செயல்படுத்துவது தான்  சிறப்புடையது என்றார் *வள்ளுவர், 

உணவே மருந்துமருந்தே உணவு* என்ற மகத்தான நுட்பம் தெரிந்தவர்கள் நம் தமிழர்கள், உணவும் மருந்தும் ஒன்றாகவே இருப்பது நம் தமிழ் மருத்துவத்தின் சிறப்பு, காய்கறிகள் எல்லாம் மருந்து (கத்திரி, பீர்க்கு, புடலை, வெண்பூசணி, முருங்கை),

 கீரைகள் யாவுமே மருந்து (அகத்தி, சிறுகீரை, பொண்ணாங்கண்ணி, பசலை, வெந்தயக்கீரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை), தினமும் நாம் உணவில் சேர்க்கும் கடுகு மிளகு சீரகம் பூண்டு மஞ்சள் சுக்கு திப்பிலி இவைகள் எல்லாமே மிகுந்த மருத்துவ குணங்கள் கொண்டது,

 கடுகு உயிர்ப்பாற்றலையே அழிக்கும் வல்லமை கொண்டது, மிளகு சளியை உறுப்புகளில் தங்கவிடாமல் வெளியேற்றும், சீரகம் சீரணப்பணியை மேம்படுத்தும், பூண்டு வாயுவை கட்டுப்படுத்தும், மஞ்சள் கிருமி நாசினியாக செயல்படும் சுக்கு திப்பிலி யாவும் உடலில் கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் கொண்டவை,

தமிழன் வாழும் முறைகளிலேயே உண்ணும் உணவு, நம்மை சுற்றியுள்ள தாவரங்கள் மூலம் மருத்துவ குணங்களை கண்டறிந்து பயன்படுத்தி வந்தான், அப்பொழுது எல்லாம் பாட்டி வைத்தியம் என்று சொல்லக்கூடிய அனுபவ வைத்தியமே இருந்தது,

இறைவனை வழிபடும் போது கூட மூலிகையை இணைத்து வழிபட்ட அந்த வாழ்வியல் முறை உலகமே மெச்சுகிறது, ஆனால் தமிழன் அதை மறந்து பறந்தள்ளியதன் விளைவு, 

 உலகமே இன்று இயற்க்கை மருத்துவத்திற்கு மாறிக்கொண்டிருக்கிறது,

நம் வாழ்வியல் சித்தன் வள்ளுவன் தனது திருக்குறளில் எவ்வித மருந்தும் இல்லாமலேயே மருந்து என்று 10குறட்பாவை எழுதினான் அதில் அவன் காட்டியிருக்கும் நுட்பந்தான் இன்று இயற்க்கை வைத்தியம் என்றும் மருந்தில்லா மருத்துவம் என்று உலகம் கொண்டாடுகிறது,

ஆனால் நம் தமிழன் நம் தமிழ் மருத்துவத்தை நம்புவதில்லை ஆகையால் தான் இன்று பல பெயர்களில் நோய்கள் மனிதனை வாட்டுகிறது, 

 பாம்பு கடித்தவுடன் வாழைப்பட்டைச் சாற்றை பிழிந்து கொடுப்பதும் பூரான் செய்யான் கடித்தால் பனை வெல்லம் தருவதும் என்ன நம் முன்னோர்களின் மருத்துவ அறிவு,

 

பல லட்சம் செலவழித்தும் குணமாகாத நோய்களெல்லாம் இன்று ஒரு எளிய மூலிகையால் குணமாவதை காண்கின்றோம், 

 இன்று பெரும்பாலான மக்களுக்கு நாகரீக நோய் சுகர் வந்து விட்டது, இயல்பாகவே ஏறி இறங்கும் இரத்தழுத்தம் ஒரு வியாதியாகவே மிரட்டப்படுகிறது, மனமும் உடலும் ஒன்றுடன் ஒன்று இணைந்து நம்மை இயக்க வல்லது என்பதை நாம் உணருவதில்லை.

 இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடினால் உணவினாலேயே கட்டுப்படுத்திவிடலாம், இரத்த அழுத்தம் கூடினால் குறைந்தால் நம் வாழ்வின் நிலையை கூர்ந்து கவனித்து நடைமுறையை மாற்றினாலே போதுமானது.

 இதயத்தில் வலி ஏற்பட்டால் உடலில் ரத்த குழாய் அடைப்பைப் போக்க 🫁 மூச்சப் பயிற்சி🫁 உணவிலேயே மருந்து, தியானம் போன்ற பரபரப்பில்லாத முறைகளை கையாண்டு வெற்றி பெறலாம்.

 இதையெல்லாம் நாம் செய்யாமல் நமக்கு கிடைத்திருக்கும் *அற்புத உறுப்புகளை சிதைக்கவும் உடனே அறுத்து போடவும் வீர்ய மருந்துகளால் உடலில் கழிவு அடைப்புகளை கூடுதலாக்கவும் செய்கிறோம்.

அது மட்டுமல்ல நாம் கூடுதலாக செலவழித்து மருத்துவம் பார்ப்பதை பெருமையாக நினைக்கிறோம்.

 உணவே மருந்து மருந்தே உணவு..!

ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய உணவு முறை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்

Comments

Popular posts from this blog

தீபாவளி பலஹாரங்கள் Deepavali snacks

ஆதித்தியன் சூரியன் Sun Solar

60s, 70s and 80s Brain skill