ருத்ராட்சம் Rudraksham

https://www.youtube.com/watch?v=b6GOX2asV7M 

https://www.youtube.com/watch?v=vmin5cHG_hI

https://www.youtube.com/watch?v=NSDjQGFvZBY

ருத்ராட்சம் என்பது ருத்ரன் அச்சம். ருத்ரன் என்றால் மரண தேவன் அச்சம் என்றால் பயம் இன்றி வாழ்தல் என்பது மரண தேவனின் பயம் இன்றி வாழ்ந்தல் ஆகும்.

ருத்ராட்சம் கற்பமரம் ஆகும்
ருத்ராட்சம் பார்ப்பதற்கு நுரையீரல் போன்றே இருக்கும். நமது உடலில் காற்றில் உள்ள ஆக்சிஜன் சமநிலையில் இல்லாத பொழுது ஏற்படும் மூச்சுத்திணறல் தலைவலி மூக்கடைப்பால் வரும் மூச்சுத்திணறல் தலை வெட்டி வெட்டி இறுத்தல்.
சைனஸ் பிரச்சனை இதற்கு ருத்ராட்சம் கொட்டையை எடுத்து நாக்கின் அடியில் வைத்தாலே போதும் மேலே கூறியுள்ள அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும்.

நுரையீரலை முறையாக இயங்க வைக்கும். ஆக்சிஜன் குறைபாடு என்பது ரத்த தட்டுகளில் பிராணவாயு குறைபாடு தான். உடல் இயங்குவதற்கு தேவையான அளவு ஆக்சிஜன பற்றாக்குறையை இது பகிர்ந்தளிக்கும்.

மூக்கில் சதை வளர்ந்து உள்ளது இந்த பிரச்சனைக்கு ருத்ராட்சம் கசாயம் செய்து கொடுக்க மூக்கில் சதை வளர்ச்சி சரியாகும். குரட்டை வராது.

ருத்ராட்சம் கொட்டையை சிறிது நீர் தெளித்து உரைத்து இந்த பசையை ஆண்களின் விதைப் பையை சுற்றி பூசி வர விதைப்பையில் வ்ரும் வெரிகோஸ் வெயின் சரியாகும். மேலும் விதைப்பையில் உள்ள ரத்தக் கட்டு சரியாகும்.

இதேபோல் ருத்ராட்சம் உடலில் எந்த இடத்தில் இருக்கும் வெரிகோஸ் வெயின் சரி செய்யும். காற்றை கடத்த முடியாமல் திணறிக் கொண்டு இருக்கும்போது ருத்ராட்சம் ரத்த தட்டுக்களில் பயணம் செய்து சமச்சீர் செய்கிறது

இரச செந்தூரம் லிங்க செந்தூரம் போன்ற உயரிய மருந்துகளை விட ருத்ராட்சம் அதிக மருத்துவ குணங்களை கொ‌ண்டது.

ருத்ராட்சம் பல வகைகளில் நமக்கு பயன்படுகிறது.சாதாரண மக்கள் தற்பொழுது தான் ருத்ராட்சத்தை பயன்படுத்த ஆரம்பித்து உள்ளார்கள் ஆனால் சன்னியாசிகள் சித்த மருத்துவர்கள் எப்பொழுதும் ருத்ராட்சத்தை பயன்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

பெண்களுக்கு ஏற்படும் பெரும்பாடு மருந்தாகும்

பெண்களுக்கு கர்ப்பப்பையில் உள்ள நீர்க்கட்டிகளை இதன் கசாயம் சரி செய்கிறது.

(கர்ப்பப்பையில் நீர்கட்டி உள்ள பெண்களுக்கு கண்டிப்பாக மூக்கில் சதை வளர்ந்து இருக்கும்)

உயரமான மலை மீது ஏறும்போது மூச்சுத்தினரல், தலைவலி, வாந்தி ,குமட்டல், ஏற்படும்.அப்பொழுது கழுத்தில் மாட்டி உள்ள ருத்ராட்சத்தை எடுத்து நாவின் அடியில் வைத்து கொள்ள அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும்.

வாத பித்த சிலேத்தும தோசங்களை சரிசெய்யும்.

மூளையில் ஏற்படும் கோளாறுகளை ருத்ராட்சம் சரிசெய்கிறது

லோ பிரஷர் குறை ரத்த அழுத்த நோய்க்கு ருத்ராட்சம் அருமருந்து

உடலில் உள்ள உப்பு சத்து எனும் யூரியா கிரியாட்டினை ருத்ராட்சம் சரிசெய்கிறது

தச வாயுக்கள் உடலில் நின்று வேலை செய்யும் இடங்களில் இந்த ருத்ராட்சத்தை கட்டுவார்கள் இது உடலை தொட்டுக் கொண்டு இருந்தாலே வாசி யோகம் யோக பயிற்சி மூச்சுப் பயிற்சி செய்யாமலேயே உடலை வஜ்ரம் ஆக மாற்றும் சக்தி ருத்ராட்சத்திற்கு உண்டு.

இந்த ருத்ராட்சம் காற்று பூதம் ஆகும். ருத்ராட்சத்தை சுண்ணாம்பு கவசம் செய்து காயவைத்து நெருப்பில் சுக்கைங சுடுவது போல் சுட்டு எடுத்து சுண்ணாம்பு கவசத்தை நீக்கிவிட்டு ருத்ராட்சத்தை பொடித்துக் கொள்ள *ருத்ராட்ச பஸ்பம் கிடைக்கும். இது தாமிர செந்தூரத்திற்கு இணையானது மேலும் இது கர்ப்ப மருந்துக்கு இணையானது*

நமது நாட்டில் உள்ள சாதுக்கள் இந்த ருத்ராட்சப் பஷ்பத்தை திருநீரில் கலந்த தருவார்கள் இதை சாப்பிட சகல நோய்களும் தீரும்.

*தா
மிரத்திற்கு இணையாக இந்த ருத்ராட்ச பஸ்பம் வேலை செய்யும் எனவே பக்கவாதம் மற்றும் பல வாத நோய்கள் தீரும் ஒரு சிட்டிகை அளவு சாப்பிடலாம்*

மேலும் இது ஹீமோகுளோபின் சரிசெய்கிறது

வெள்ளை வெட்டை சரி செய்கிறது.

ருத்ராட்சம் மனநோய் எனப்படும் ஹிஸ்டீரியா பைத்தியம், மனகுழப்பம், பயம், பிரமேகம் மேகம் சர்க்கரை நோய் சரிசெய்யும்.

  1. ருத்ராட்சம் என்றால் என்ன?ருத்ராட்சம் என்பது இந்த பூலோகத்தில் சிவ பெருமானின் அவதாரமாக, சிருஷ்டிக்கக் கூடிய ஒரு மூலிமை மரமாகும். சித்தர்களின் அனுக்கிரகமாக்க அவர்கள் தியானம் செய்யும் போது ருத்ராட்சம் அணிந்து தியானம் செய்வார்கள்.
  2. ருத்ராட்ச மணி எந்த அளவு இருக்க வேண்டும்?உருத்திராக்க விசிட்டம் என்னும் நூலில் ருத்ராட்ச மணி எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதை குறிப்பிடப்பட்டுள்ளது. நெல்லிக்கனி அளவுள்ள மணி உத்தமமானது ; இலந்தைக் கனிஅளவுள்ளது மத்திமம் ; கடலை அளவுடையது அதமம். இதனைப் பின்வரும் வெண்பா ; "உத்தமமே மலகத் தின்கனிக்கொப் பானகண்டி ; மத்திம மாகும் இலந்தை வன்கனிக்கொப்பு இத்தலத்துள் நீசஞ் சணவித் திணை யென்ன வேநினைக ; பாசவிதம் பாற்ற நினைப் பார். "
  3. ருத்ராட்சம் ஜெபம் செய்ய பயன்படுத்த வேண்டிய விரல்கள்அங்குஷ்டத்தினால் மோட்சமும், தர்ச்சனியால் சத்துரு நாசம், மத்திமையால் பொருட்பேறும், அனாமிகையால் சாந்தியும், கனிஷ்டையால் இரட்சைணையும் . (அங்குஷ்ட என்பது கட்டை விரல்; தர்ச்சனி என்பது ஆள்காட்டி விரல்; மத்திமை என்பது நடு விரல்; அனாகிகை என்பது மோதிர விரல் ; கனிஷ்டை என்பது சுண்டு விரல்.)
  4. Who can wear Rudraksha in Tamil? - பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா?ருத்ராட்சத்தில் கிட்டத்தட்ட 21 முகங்கள் வரை கொண்ட ருத்ராட்சங்கள் உள்ளன. ஆண்கள் எந்த வயதாக இருந்தாலும் அவர்கள் ருத்ராட்சத்தை அணியலாம். பெண்கள் பொதுவாக அவர்களின் மாதவிலக்கு முழுவதும் நின்ற பின்னர் அணிவது நல்லது. அப்படி அணியும் பெண்கள் ருத்ராட்சம், பவளம், முத்து, ஸ்படிகம் ஆகியவை சேர்த்து கோர்த்து அணிந்து கொள்வது நல்லது. பெண்கள் 3,6,9 முக ருத்ராட்சங்கள் மட்டும் அணியலாம். ஆண்கள் வெறும் ருத்ராட்ச மாலையை கூட அணியலாம். சிறு சிறு ருத்ராட்சங்கள் கோர்த்த மாலையை அணியலாம். 27 நட்சத்திரங்களுக்கான ருத்ராட்சம்.
  5. ருத்ராட்ச வழிபாடு அபிஷேகம் செய்வது எப்படி?ருத்ராட்சம் அணிபவர்கள் ஒரு வாரத்திற்கு ஒரு முறை அதற்கு பூஜை செய்து அணிவது நல்லது. அதிகபட்சம் ஒரு மாதத்திற்கு ஒருமுறையாவது பிரதோஷம் அல்லது திங்கட்கிழமைகளில் பூஜை செய்து அணிவது நல்லது. ஒரு தாம்பூலத் தட்டு எடுத்துக் கொண்டு. அதில் ஒரு வெத்திலை வைத்து அதன் மீது ருத்ராட்சத்தை வைத்து அபிஷேகம் செய்ய வேண்டும். பால், சந்தனம், விபூதி, பன்னீர், வில்வம் கொண்டு ருத்ராட்சத்திற்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்ய வேண்டும். அபிஷேகம் செய்வதற்கு முன் ருத்ராட்சத்தைப் பன்னீரில் ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து பூஜை செய்து அணிந்து கொள்ள ருத்ராட்சத்திலிருந்து நல்ல சக்திகள் கிடைக்கும்.
  6. Rudraksha Mantra in Tamil- ருத்ராட்சம் அணியும் போது சொல்லக் வேண்டிய மந்திரம்?ருத்ராட்சத்திற்கு அணிவதற்கு முன் பூஜை செய்து அதற்கு ஒரு பூ வைத்து “ஓம் ருத்ரதேவாய நமோ நமக ஓம் சிவாய நம” என்ற மந்திரத்தைச் செய்து அணிந்து கொள்ள மிக சிறப்பான சக்திகள் கிடக்கப்பெறுவீர்கள்.
  7. How to find original Rudraksha in Tamil?உண்மையான ருத்ராட்சம் எப்படி கண்டுபிடிப்பது?கலிகாலமான புனித ருத்ராட்சத்தைக் கூட தற்போது மரக் கட்டை, பிளாஸ்டிகில் போலியான ருத்ராட்சங்கள் விற்கப்படுகின்றன. உண்மையான ருத்ராட்சம் உள்ளே ஓடு போன்று இருக்கும். அதை உடைத்துப் பார்த்தால் தான் தெரியும். உண்மையான ருத்ராட்சம் கண்டறிய அதை தண்ணீரில் போட்டு மூழ்கினால் உண்மையானது இல்லையென்றால் போலியானது என சிலர் கூறுகின்றனர். அப்படி இல்லை சற்று கடினமான மரக்கட்டை மூழ்கும். பொதுவாக உண்மையான ருத்ராட்சம் கையில் எடுத்தாலே அதன் அதிர்வு நமக்கு தெரிந்துவிடும்.
  8. Can we eat non-vegetarian after wearing Rudraksha in Tamil? - ருத்ராட்சம் அணிபவர்கள் அசைவம் சாப்பிடலாமா?ஆண்கள் எந்த வயதாக இருந்தாலும் அணியலாம். பெண் பிள்ளைகள் மாதவிலக்கு ஆகக் கூடியவர்கள் அணியாமல் இருப்பது நல்லது. இரவில் தூங்கும் போது அதை கழற்றி பூஜை அறையில் வைத்து விடுவது நல்லது. மாமிசம் சாப்பிடுபவர்கள் அன்று ருத்ராட்சத்தை கழற்றி வைத்து விடுவது நல்லது. மறு நாள் குளித்துவிட்டு இறைவனை வணங்கி அணிந்து கொள்ளலாம்.
  9. ருத்ராட்சம் அணிவதன் பயன்கள் :ருத்ராட்சம் அணிந்து நாம் தினமும் குளிக்கும் போது, இந்த ருத்ராட்சத்தின் மீது பட்டு நம் உடலின் மீது படும் நீர் கங்கை நீரில் குளித்த பலன் கிடைக்கும். இதனால் ஒவ்வொரு நாளும் நாம் கங்கையில் நீராடிய புண்ணியம் நமக்கு கிடைக்கும்.
  1. ருத்ராட்சம் குறித்த அறிவியல் உண்மை:ருத்ராட்சத்தை ஆராய்ச்சி செய்து பல முடிவுகள் வெளியிடபட்டுள்ளன. ருத்ராட்சம் உடலோடு ஒட்டிக்கொண்டு அணிந்து கொள்ளும் போது, உடலுக்குள் ஏற்படும் பல்வேறு வித நோய் கிருமிகளை அழிக்க வல்லதாக ருத்ராட்சம் உள்ளது. அதிக பதற்றம், மன அழுத்தம், சர்க்கரை வியாதி, இதய நோய்கள், புற்று நோய்கள் என பல்வேறு நோய்களைப் போக்கக் கூடிய ஒரு அபூர்வமான பொருளாக இந்த ருத்ராட்சம் பார்க்கப்படுகின்றது.
  2. ருத்ராட்சம் முகங்களும் பலன்களும்ருத்ராட்சத்தில் உள்ள கோடுகளை முகம் என கூறுகின்றோம். 5 கோடுகள் இருந்தால் ஐந்து முக ருத்ராட்சம், ஆறு கோடுகள் இருந்தால் ஆறு முக ருத்ராட்சம் என கூறப்படுகின்றது. மொத்தம் 1 - 21 முக ருத்ராட்சங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விசேஷ பலன்களைத் தரக்கூடியது.
  1. ஒரு முக ருத்ராட்சம் பயன்கள்மிகவும் அரிதாக ஒரு முக ருத்ராட்சம் (ஏக முகம் ருத்ராட்சம்) காணப்படுகின்றது. இதைப் பார்ப்பதே புண்ணியம். தொட்டு வணங்கினாலே பாவங்கள் தீரும்.
  2. What is Gauri Shankar Rudraksha in Tamil? கெளரி சங்கர் ருத்ராட்சம் என்றால் என்ன?இரண்டு ருத்ராட்சங்கள் இணைந்து இருக்கும் கெளரி சங்கர் ருத்ராட்சம் அணிவதன் மூலம் , அம்மை, அப்பனை சேர்த்து இருக்கக் கூடிய பலனை தரும்.
  3. How can we take care of Rudraksha? - ருத்ராட்சத்தை பராமரிக்கும் முறைகள்ருத்ராட்சத்தில் இயற்கையாகவே மின்காந்த சக்தி உள்ளது. அந்த சக்தி முழுவதும் நமக்கு கிடைக்க வேண்டும், அதனால் ருத்ராட்சத்தை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

தீபாவளி பலஹாரங்கள் Deepavali snacks

ஆதித்தியன் சூரியன் Sun Solar

60s, 70s and 80s Brain skill