கோதானம் பசுவுக்கு தானம்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை ,
மன வருத்தம் ,
கடன் பிரச்சனை,
கல்யாணம் ஆகாது இருத்தல்,
குழந்தை பாக்கியம் இல்லாமல் இருத்தல், சண்டை சச்சரவுகள் வீட்டுக்குள்ள இருக்கும் உறவினர்களுடன்.
வேலை இல்லை ,
சரியான சம்பளம் இல்லை இவர்களுக்கு தங்களுக்கு ஏற்ற பரிகாரம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது கோ மாதாவிற்கு வேண்டிக்கொண்டு தங்களுக்கு ஏற்ற பலன் கிடைக்க கீழ்கண்ட தானம் எது தேவையோ அதை கொடுத்து கோ மாதாவின் அருள் பெறுங்கள்.
கோமாதாவிற்கு தரக்கூடிய தானத்தின் பலன்;-------
1) கொள்ளு (ஊறவைத்தது) - செய்யும் தொழிலில்/வேலையில் நிலையாயிருத்தல்
2) காராமணி (ஊறவைத்தது) -தனம் அபிவிருத்தி
3) கோதுமை (ஊறவைத்தது) -கீர்த்தி, உறுதி
4) கீரை, வெல்லம் -நிம்மதி, தரித்திரம் நீங்கும், அறிவு வளரும், கோர்ட் வழக்குகளில் வெற்றி
5) கடலை பருப்பு (ஊறவைத்தது) -
கோபம் குறையும்
6) உளுந்து (ஊறவைத்தது) -ஆத்ம விஸ்வாஸம் பெருகும்
7) கடலை (ஊறவைத்தது) -ஆத்யாத்மிக
சிந்தனை பெருகும்
8) பச்சைப்பயறு (ஊறவைத்தது) -
வித்யை அபிவிருத்தியாகும்
9) உருளைக்கிழங்கு - நரகோஷ (சண்டை சச்சரவு) நிவாரணம்.
10) கேரட் - வியாபாரம் அபிவிருத்தியாகும்
11) பீட்ரூட்/பாலக் - ஐஸ்வர்ய ப்ராப்தி
12) தோசக்காய் - சத்ரு நிவாரணம்
13) தக்காளி - விவாஹ ப்ராப்தி
14) கத்திரிக்காய் - சந்தான ப்ராப்தி
15) வாழைப்பழம் - உன்னதமான பதவி
16) வெண்டைக்காய் - தைரியம்
17) கோவக்காய் - மன அமைதி
18) உளுத்தமாவு வெல்லம் - அகண்ட ஐஸ்வர்ய ப்ராப்தி
19) கோதுமை மாவு வெல்லம் - உத்யோக ப்ராப்தி
20) ப.பருப்பு (ஊறவைத்தது) - இந்த்ரியங்களை அடக்கும் தன்மை
21) து.பருப்பு (ஊறவைத்தது) - ருண விமுக்தி (கடன் தொல்லை தீரும்)
22) உ.பருப்பு (ஊறவைத்தது) - ஆரோக்ய ப்ராப்தி (உடல்நலம்)
23) க.பருப்பு (ஊறவைத்தது) - குடும்பத்தில் குழப்பங்கள் விலகும்
24) பாசிப்பருப்பு (ஊறவைத்தது) - புத்தி கூர்மை, கல்வியில் மேன்மை.
Comments
Post a Comment