ரத்தக்கொதிப்பு பி பி

உணவுக்கும் ரத்த கொதிப்புக்கும் என்ன சம்பந்தம் ?

உணவு முறை மாற்றத்தால் ரத்த கொதிப்பை கட்டுபடுத்த முடியுமா? 

மாவுச்சத்தின்(Carbohydrates)  அளவுகளை குறைத்து உண்ணும் போது 

குறைந்த க்ளைசீமிக் உணவுகளை உண்ணும் போது 

ரீபைண்டு மாவுச்சத்து அடங்கிய இனிப்புகளை உண்பதை நிறுத்தும் போது 

ஒருவர் தன் எடையைக்குறைக்கும் போது 

ரத்த அழுத்தம் குறைகிறது 
ரத்த கொதிப்பு நோய் கட்டுப்படுகிறது (Remission) 

எப்படி ?

உயர் ரத்த அழுத்தமும் தவறான உணவு முறையால் வரும் வியாதியே ஆகும். 

உடலில் ரத்த க்ளூகோஸ் அளவுகள் அதிகமானால் அதனை குறைக்கச் செய்ய நமது கணையம் இன்சுலினை சுரக்கும். 

அதிகமான இன்சுலின் சுரப்பு தான் (hyperinsulinemia) நமக்கு வரும் ரத்த கொதிப்புக்கு அடிப்படைக் காரணம்.

Point 1 

இன்சுலின் சுரப்பு அதிகமாக இருந்து கொண்டே இருந்தால்,
நமது உடலில் உள்ள தனிச்சை நரம்பு மண்டலம்(sympathetic nervous system)  தூண்டப்படும்.

உடலில் உள்ள ரத்த நாளங்களை சுருங்கச்(vaso constriction)  சொல்லி இன்சுலின் கட்டளையிடும் இதனால் மேலும் பிரஷர் கூடுகிறது. 

நரம்பு மண்டலமும் இன்சுலினால் தூண்டப்படுவதால் , இதயத்துடிப்பு அதகமாகிறது(tachycardia) . இதயத்துடிப்பு அதிகமாவதால் நமக்கு பிரஷர் ஏறுகிறது.
 (increased cardiac output) 

Point 2 

இன்சுலின் ரத்தத்தில் அதிகமானால், கிட்னிகளுக்கு சோடியத்தை தேக்கி வைக்க கட்டளை பிறப்பிக்கப்படும். (Sodium retention) சோடியத்தை சேமிக்க தண்ணீரும் வேண்டும். ஆகவே கூடவே தண்ணீரும் சேமிக்கப்படும்.

சோடியம் அதிகமானால் நமது ரத்த அழுத்தம் கூடும். 
சோடியத்துடன் தண்ணீரும் உடலில் சேருவதால் நமது இதயத்துக்கு வேலைப்பளு அதிகமாகிறது (increased pre-load) . அதனால் இதயம் இன்னும் அதிகமாக ஸ்திரத்துடன் துடிக்க வேண்டியிருக்கிறது. இது இன்னும் பிரஷரை ஏற்றிவிடும்.

Point 3

நமது இதயத்தின் தசைகளும், ரத்த நாளங்களில் தசைகளும்  ஸமூத் மசில்களால்(vascular smooth muscles)  ஆனது, அவை சுருங்க அவற்றினுள் கால்சியம் (ca2+) செல்ல வேண்டும். அதிகமான கால்சியம் உள்சென்றால், இதயம் அதிகமாக துடிக்கும். குறைவாக சென்றால் குறைவாக துடிக்கும்.

இன்சுலின் ரத்தத்தில் அதிகமாக இருக்கும் பொழுது, இந்த இதயத்தின் ஸ்மூத் மசில்களில் கால்சியம் வீரியத்துடன் (increases calcium sensitivity) செயல்பட்டு இதயத்தை பலமாக துடிக்க வைக்கிறது (increases heart rate ) இதனால் ரத்த அழுத்தம் உயர்கிறது. இந்த அழுத்தத்தை சரிசெய்ய சில முக்கிய தமனிகள்(large arteries)  முயல்கின்றன. இருப்பினும் தொடர்ந்து நாம் மாவுச்சத்தை உண்டு இன்சுலின் அதிகமாகவே இருப்பதால், ஒரு கட்டத்தில் ரத்த அழுத்தம் வந்து விடுகிறது. 

Point 4

ரத்த அழுத்தம் சீராக இருக்க கிட்னிகளில் இருந்து சுரக்கும் RENIN எனும் ஹார்மோன் கட்டாயத் தேவை என்று பார்த்தோம். இந்த ஹார்மோன் சுரந்து ஆஞ்சியோடென்சின்-1 என்ற பொருளை -> ஆஞ்சியோடென்சின்-2 வாக மாற்றி நமது ரத்த குழாய்களை சுருங்கச் செய்கிறது. 

இதனால் ரத்த அழுத்தம் கூடுகிறது. 
நமக்கு ரத்தப்போக்கு ஏற்படும் போதோ அல்லது நமது ரத்த அழுத்தம் குறையும் போதோ இந்த RENIN -ANGIOTENSIN-ALDOSTERONE-SYSTEM தான் நம்மை காக்கிறது. 

ஆனால் இன்சுலின் அதிகமாக சுரப்பதால், இந்த RAAS system தேவைக்குமீறி தூண்டப்படுகிறது. அதனால் ரத்த நாளங்கள் சுருங்கி பிரஷர் வருகிறது. 

இதிலிருந்து நாம் உணர்வது என்ன??

இன்சுலின் சதா சர்வகாலமும் நமது ரத்தத்தில் இருந்து கொண்டே இருப்பது நமக்கு நாமே தீங்கிழைப்பதற்கு சமம். 

இன்சுலின் தேவைக்கு ஏற்றாற்போல உடலில் இருந்தால் தான் நமக்கு அதனால் நன்மை. 
(https://www.ncbi.nlm.nih.gov/m/pubmed/7512468/)

ரத்த கொதிப்புக்கு முக்கியமான காரணம் 

"இன்சுலின் ரெசிஸ்டெண்ஸ்" தான்

நாம் இன்சுலினை குறைவாக சுரக்கச் செய்யும் க்ளைசீமிக் இன்டெக்ஸ் குறைவான உணவுகளை(காய்கறிகள்) உண்பது நல்லது. 

க்ளைசீமிக் இன்டெக்ஸ் அதிகமான உணவுப்பொருட்களை (தானியங்கள் , பேக்கரி உணவுகள்) உண்டால் நமது ரத்தத்தில் இன்சுலின் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.

அந்த இன்சுலினும் வேலை செய்யாமல் போகும்.

நாளடைவில் ரத்த கொதிப்பு வரும்.

குறை மாவு நிறை கொழுப்பு உணவு முறை இயற்கைக்கு நெருங்கிய உணவு முறை.

இந்த உணவு முறையில் இன்சுலின் சுரப்பு மிக மிக குறைவு.  

🏅உயர் ரத்த அழுத்தத்தை சீர் செய்யும் உணவு முறை - குறை மாவு நிறை கொழுப்பு உணவு முறை.

சரி.. சோடியம் பொட்டாசியம் அளவுகள் 
குறை மாவுநிறை கொழுப்பு உணவு முறையான பேலியோ உணவு முறையில் சரியான விகிதத்தில் இருக்கின்றனவா? 

நாம் உண்ணும் உணவில் 2000மில்லிகிராமிற்கு மிகாமல் சோடியம் அளவுகளும்
3500 மில்லிகிராமிற்கு குறையாமல் 
பொடாசியம் அளவுகளும் இருப்பது ஒருவரை ரத்த கொதிப்பு, மாரடைப்பு, பக்க வாதம் முதலிய நோய்களில் இருந்து காக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. (http://www.who.int/mediacentre/news/notes/2013/salt_potassium_20130131/en/)

நாம் எடுத்த ரெகுலர் சவுத் இண்டியன் டயட்டையும் 
குறைமாவு நிறை கொழுப்பு எனும் பேலியோ உணவு முறையில் 
சோடியம் மற்றும் பொடாசியம் அளவுகள் எவ்வளவு இருக்கின்றன என்பதைப் பற்றிய ஆய்வு. 

இந்த ஆய்வில் உணவில் சேர்க்கப்படும் டேபிள் சால்ட்டை தனியாக எடுத்துக்கொள்ளாமல், ஒவ்வொரு உணவிலும் இருக்கும் சோடியம் அளவுகளை நேரடியாக கணக்கிடப்பட்டுள்ளது. 

முதலில் காமன் சவுத் இண்டியன் டயட் பின்வருமாறு 
உணவுப் பொருள் - சோடியம் - பொடாசியம் 

காலை பால் டீ ஒரு கப் - 100mg - 366mg 

காலை உணவு 4 இட்லி சட்னி - 890mg - 300mg 

மதியம் அரிசி சாதம் ஒரு கப் - 600mg - 56 mg 

சாம்பார் - 600mg - 670mg

100 கிராம் காய்கறிகூட்டு - 75mg - 400mg 

இரவு 3 தோசை சட்னி - 823mg - 220mg 

இரவுபால் ஒருகப் -100mg-366 mg

    மொத்தம் -3188mg சோடியம்
                    2378mg பொடாசியம்

இது இல்லாமல் நாம் உண்ணும் ஸ்நேக்ஸ் விசயங்களில் உள்ள சோடியம் அளவுகளைப் பாருங்கள்

வடை ( இரண்டு) - 780mg sodium
பப்ஸ் - 253mg sodium
பாப்கார்ன் - 110mg sodium 
கோக் - 50mg sodium
பிரட் - 250mg sodium
பிஸ்கட் ஒன்று - 348mg sodium 
ஊறுகாய் - 663mg sodium
கருவாடு - 200mg sodium 

இவையல்லாமல் ஒரு நாளில் அசைவ உணவுகள் சேர்த்தால் 
சிக்கன் 200கிராம்- 190mg sodium
மட்டன் 200கிராம்- 331mg sodium 
மீன் 200கிராம் - 300mg sodium 

ஆக ஒரு நாளைய சோடியம் உட்கொள்ளுதல் ரெகுலர் சவுத் இண்டியண் டயட்டில் 4000mg ஐ தாண்டுகிறது. 

இப்போது நமது குறை மாவு நிறை கொழுப்பு பேலியோ உணவு முறையில் சோடியம் அளவுகளை பார்ப்போம் 

உணவு - சோடியம் - பொடாசியம்

காலை ஆம்லெட் 4 முட்டை - 380mg - 500mg 

மதியம் - பாதாம் 100கிராம் - 1mg - 705mg 

மாலை காய்கறி கீரை சூப் 500கிராம் + 50கிராம் பட்டர் - 225mg- 1225mg 

ஸ்நேக்ஸ் கொய்யா காய் - 2mg - 420mg 

இரவு - சிக்கன் கிரில்டு 300கிராம் - 1100mg - 830mg 

மொத்தம் - 1708mg சோடியம்
                  3680mg பொடாசியம்

குறை மாவு நிறை கொழுப்பு உணவு முறையில் தேவையற்ற திண்பண்டங்கள்/ பொறித்த உணவுகள்/ பேக்கரி ஐட்டங்கள் உண்பதில்லை என்பதால் சோடியம் அளவுகள் ஏறுவதில்லை.

மேலும் , இன்சுலினின் சுரப்பு அதிகம் இல்லாமல் பார்த்துக்கொள்வதால்,
நாம் உணவில் உட்கொள்ளும் சோடியம் சிறுநீரில் வெளியேறிவிடும்.
அதனால் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். 

ஆகவே, ரத்த கொதிப்பு உள்ளவர்கள் குறைமாவு நிறை கொழுப்பு உணவு முறையை எடுத்தால் சோடியம் அளவுகள் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கும். 

பொடாசியம் அளவுகள் தேவைக்கு கிடைத்து விடுவதால், ரத்த அழுத்தம் சீராக மெய்ன்டெய்ன் ஆகும். 

தாங்கள் ரத்த கொதிப்பு(Hypertension)   இருக்கும் நோயாளியா? 

உங்கள் உணவில் மாவுச்சத்தின் அளவை குறைத்து உண்ணுவோம்

இனிப்பு சுவை தரும் எந்த பொருளையும் உண்ணாமல் இருப்போம்

மது புகை பழக்கத்தை கை விடுவோம்

தீனிக்கடை உணவுகளை தவிர்ப்போம்

ரீஃபைண்டு எண்ணெய் தவிர்ப்போம் 

எண்ணெயில் அதிக உஷ்ணத்தில் பொரித்த உணவுகளை தவிர்ப்போம்

தினமும் ஒரு மணிநேரம் நடைபயிற்சி செய்வோம்

மன அமைதியின் முக்கியத்துவத்தை உணருவோம்

கட்டாயம் எட்டு மணிநேரம் உறங்குவோம் 

மன அழுத்தம் இன்றி வாழுவோம்

பின்குறிப்பு - முறையான நவீன  மருத்துவ சிகிச்சைையுடன் கூடிய கண்காணிப்பு ரத்த கொதிப்பு நோயாளிகளுக்கு கட்டாயம். எனவே உணவு முறை மாற்றத்தை மருத்துவரிடம் கூறி குறையும் ரத்த அழுத்தத்துக்கு ஏற்றவாறு மருந்துகளின் அளவை அவரது அறிவுரையின் பேரில் மாற்றி அமைத்திட முடியும். சுய மருத்துவம் / சுயமாக மருந்துகளை நிறுத்தவது  ஆபத்து 

ரத்த கொதிப்பைக் கட்டுப்படுத்துவோம் 
நலமோடு வாழ்வோம் 

Comments

Popular posts from this blog

பாவம் புண்ணியம்

திருமாங்கல்யம்

நேர்மறை சக்தி