கலிகால குரு

புற வேடங்களால் பயனில்லை !

கொக்கிற்கு தெரியாத குளம் இங்கு இல்லை..

அணில் அறியாத பழங்களும் இங்கு இருந்த  சரித்திரமில்லை..

கண்காணியில்லாத..தேசங்களும் இங்கில்லை...

ஆமாம்...

பழங்கள் பழுக்கத்தொடங்குவது முதலில் வெளிப்பகுதியில் அல்ல!

உட்பகுதி பழுக்கத் தொடங்கினால், தானே வெளிப்புறம் நிறம் மாறும்!

வெளிப்பகுதி பழுத்து, உட்பகுதி பழுக்கவில்லையென்றால் உண்ண தகுதியற்றதே!

அதன் பெயர் "வெம்பல்"!

வெதும்பிய கணி அணிலுக்கு கூட பிடிக்காது!

கொக்கிற்கு தெரியாத குளங்கள் இருக்க இயலாது!

எக்குளத்தில் மீன்கள் துள்ளி விளையாடு்ம்?, அவற்றை எளிதாக இறையாக்கும் திறனும் அது அதன் ஜீனில் அமைந்த ஒன்றே!

தவறு  செய்வதை யாரும் பார்க்கவில்லை என யாரும் இங்கே என தவறுகளை துணிந்து செய்ய இயலாது.

இறைவன் கண்காணியாய் கவனிக்கிறான்!

உடல் அளவில் சிவ வேடம் தரித்தாலும் ஆன்மா பழுத்தால்தான் பயன்!

ஆன்மா அத்தனைக்கும் ஆசைப்பட்டு....

 வெறும் புறவேடங்களால் உடல் பழுத்து பயனில்லை....

இன்றைய  கலி காலத்தில் தன்னை குரு என்று கூறிக் கொள்பவர், எப்படி இருப்பார்கள் என்பதை  கொங்கணசித்தர் அன்றே கூறியுள்ளதை  கேளுங்கள்.

குருடான செத்தெழுத்தை யுபதேசிப்பான்
                       
கூறு கெட்ட பாவிசெய்த கொடுமை ஐயோ
             
திருடான மருளன் பூரணமே யென்பான்
                       
தீர்த்த மென்பான் கோயிலென்பான் தெய்வமென்பான்
மருடான மருடனப்பா மயங்கி மாள்வான்.
                       
மனதார உபசாரக் காரஞ் செய்யமாட்டான்.
             
அருளான அருளைனைப்போற் பரமே யென்பான்
அம்பலத்தை காணாத அசடனாமே - என்கின்றார்

இந்த போலி குருமார்கள் ஒன்றுக்கும் உதவாத நான்கு ஐந்து எழுத்துகளை கூறி தீட்சாமந்திரம் என்பான்.

தீட்சை என்பான், இவன் திருடனாவான்.

தன்னை நாடி வருபவர்களிடம் புண்ணிய தீர்த்தம், முக்தி தரும் தலம் என்று ஏதாவது  பொய்க் கதைகளை கூறுவான்.

இதனை கேட்பவர்கள் இவன் பேச்சு சாமர்த்தியத்தால் இவன் கூறுவதை கேட்டு மயங்கி விடுவார்கள்.

இவன் கேட்கும், பொருள், பணத்தை தந்து விடுவார்கள். ஆனால் இந்த குரு பிறருக்கு மனதார உபகாரம் நன்மை செய்ய மாட்டான்.
பெரிய அருள் சக்தி  தன்னிடம் உள்ளது போல் வெளியில் காட்டிக்  கொள்வான். இவன் ஆன்மா  இருக்கும் இடம் தெரியாத அசடன் என்கின்றார்.

Comments

Popular posts from this blog

தீபாவளி பலஹாரங்கள் Deepavali snacks

ஆதித்தியன் சூரியன் Sun Solar

60s, 70s and 80s Brain skill