அன்பும அருளும்

உலகம் இரண்டு வகை 

பல உலகங்கள் இருந்தாலும் ஆன்மாக்கள் வாழ்வதற்கு இரண்டு உலகம் மிகவும் முக்கியமானதாகும் ஒன்று பொருள்உலகம் ஒன்று அருள்உலகம் பொருள் உலகத்தில் வாழ்ந்து ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்றால் மட்டுமே அருள் உலகம் சென்று பேரின்ப சித்தி பெருவாழ்வு வாழ்வதற்கு உண்டான வாய்ப்புகள் வழங்கப்படும்

ஆன்மாக்கள் அருள் பெறாதவரை. உயிர் உடம்பு  எடுத்து எடுத்து இறந்து இறந்து பிறந்து பிறந்து பலப்பல பிறவிகள் எடுத்துக்கொண்டு வாழவேண்டியதுதான்
அதனால்தான் இவ்வுலக வாழ்க்கை நிலையில்லாத இன்பம் துன்பம் நிறைந்த வாழ்க்கை என்றுச் சொல்லப்படுகிறது.

அருளாளர்கள் வருகை!

உயர்ந்த பிறப்பான மனிதப்பிறப்பு கொடுக்கப்பட்டதின் நோக்கம் இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருளைப் பெற வேண்டும் என்பதற்காகவே பல சிறந்த பக்குவமுள்ள ஆன்மாக்களை வாழையடி வாழையாக அனுப்பிக் கொண்டே இருக்கிறார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர். அவர்களுக்கு ஷடாந்த சுத்த  சன்மார்க்க உயர்ந்த ஞானிகள் என்றும் அருளாளர்கள் என்றும் பெயர் சூட்டப்பட்டது.

வள்ளலாருக்கு முன்புவரை அருள் பெறுவதற்கு உண்டான நேர்வழியை எந்த ஞானிகளும் பின்பற்றவில்லை.நேர்வழியை காணவில்லை மக்களுக்கும் சொல்லித்தர இயலாமல் தவறான சிக்கலான வழியையே காட்டிவிட்டார்கள், ஆகையால் மனித இனம் திசை தெரியாமல் அலைமோதிக் கொண்டுள்ளது.

வள்ளலார் பாடல்!

பன்னெறிச் சமயங்கள் மதங்கள்என் றிடும்ஓர்
பவநெறி இதுவரை பரவிய திதனால்

செந்நெறி அறிந்திலர் இறந்திறந் துலகோர்
செறிஇருள் அடைந்தனர் ஆதலின் இனிநீ

புன்னெறி தவிர்த்தொரு பொதுநெறி எனும்வான்
புத்தமு தருள்கின்ற சுத்தசன் மார்க்கத்

தன்னெறி செலுத்துக என்றஎன் அரசே
தனிநட ராஜஎன் சற்குரு மணியே.

மேலும் அண்ணிய உலகத்தாரும் அறிந்து கொள்ளவில்லை என்ற பாடல்

நண்ணிய மதவெறி பலபல அவையே
நன்றற நின்றன சென்றன சிலவே

அண்ணிய உலகினர் அறிகிலர் நெடுநாள்
அலைதரு கின்றனர் அலைவற மகனே

புண்ணியம் உறுதிரு வருள்நெறி இதுவே
பொதுநெறி எனஅறி வுறமுய லுதிநீ

தண்ணிய அமுதுணத் தந்தனம் என்றாய்
தனிநட ராஜஎன் சற்குரு மணியே.!

உலகத்திற்கே ஒரு பொது நெறியைத்தோற்றுவித்தவர் வள்ளல்பெருமான் ஒருவரே என்பதை உணர்ந்து அவர் காட்டிய ஜீவகாருண்யத்தையும் நான்கு ஒழுக்கங்களையும் சத்விசாரம் என்னும் இயற்கை உண்மை கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் உண்மை விளக்கத்தையும் அறிந்து தொடர்பு கொண்டு  அருளைப் பெற்றால் மட்டுமே இயற்கை இன்பத்தை பெற்று கடவுள்நிலை அறிந்து அம்மயமாகி அருள் உலகத்தில் என்றும் அழியாத பேரின்பசித்திப் பெருவாழ்வு வாழலாம்.

மனித தேகம் எடுத்த உயர்ந்த அறிவுள்ளவர்கள் பொருள் உலகத்தில் வாழ்ந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருள் பெற்று மரணத்தை வென்றால் மட்டுமே அருள் உலகத்திற்கு செல்லமுடியும்.

அருள் பெறுவதற்கு சிறந்த நேர்வழி

இவ்வுலகப் பொருள்கள் நம்மிடம் எதுவும் இருக்கப்படாது.
சம்பாதித்து சேர்த்து வைத்த பொருளை மற்றவர்களுக்கு கொடுப்பதுதான் ஜீவகாருண்யம் என்பதாகும்.

பொருள் இல்லாத ஏழைகளுக்கு பொருளைக் கொடுத்துவிட்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை இடைவிடாது தொடர்பு கொள்ள வேண்டும் அதுவே சத்விசாரம் என்பதாகும்

இவற்றை விடுத்து தேவை இல்லாத வேலைகளை செய்வதால் எந்த பயனும் இல்லை

வள்ளலார் பாடல்!

பொருட்டல நும் போகம்எலாம் பொய்யாம்
இங் கிதுநான்
புகலுவதென் நாடொறும் புந்தியிற்கண் டதுவே

மருட்டுலகீர் இருட்டுலகில் மடிவதழ கலவே
மரணமிலாப் பெருவாழ்வில் வாழவம்மின் இங்கே

பொருட்டிறஞ்சேர் சுத்தசிவ சன்மார்க்க நிலையில்
பொருந்துமின்சிற் சபைஅமுதம் அருந்துமின்அன் புடனே

அருட்டிறஞ்சேர்ந் தெண்ணியவா றாடுமினோ நும்மை
அடுப்பவரே அன்றிநின்று தடுப்பவர்மற் றிலையே

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 
அன்பே அகிலமெலாம் விளங்கட்டும்.
அன்புடன் ஆன்மநேயன்

Comments

Popular posts from this blog

பாவம் புண்ணியம்

திருமாங்கல்யம்

நேர்மறை சக்தி