மண்பாண்ட வாழ்க்கை முறை
மண்பா ண் ட வாழ்க்கை முறை மண்பாண்டங்களும் நவீன பாத்திரங்களும் மண்பாண்டங்கள் மனித குல நாகரீகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சிறப்பு பெற்றவை. சக்கரம் மற்றும் மண்பாண்டம் மரபு கண்டுபிடிப்பின் உச்சம் எனலாம். மனித குலம் தோன்றிய முதலே இதன் பயன்பாடும் தோற்றம் பெற்றது. அதன் தேவையை புரிந்து சிறப்பாக வடிவமைத்து பயன்படுத்திருக்கிறார்கள். உன்னதமான பாரம்பரியப் பாத்திரங்களில் உணவைச் சமைத்ததும் உற்சாகமான மனநிலையில் அன்பையும் கரண்டி வழியே கலந்து பரிமாறிய காலம் போய் இன்று நவீனமயம் தான் பல்வேறு இன்னல்களுக்கு காரணம். உணர்வோடு மட்டுமல்லாமல், சமைக்கும் பாத்திரங்களாலும் சமையலில் சத்துக்கள் குறைகிறது என்கிறது சமீபத்திய ஆய்வு. மண் பாண்டத்தில் ஆரோக்கியமாய் தொடங்கி, பித்தளை, வெண்கலம், இரும்பு, ஈயம் என்பதோடு நில்லாமல் எவர்சில்வர், அலுமினியம் எனத் தொடர்ந்து, தற்போது… ஈசியாக செய்யக்கூடிய, உணவோடு ஒட்டாத நவீன நான்ஸ்டிக் பாத்திரங்களும் விற்பனைக்கு வந்து பெண்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அதுவே சர்க்கரை வியாதி, முழங்கால் வலி, உடல் வீக்கம், நுரையீரல் தொற்று, விரைவில் முதுமை, என இதர வியதிகளுக்கும் இந்த பாத்திரங்க...