Posts

Showing posts from April, 2022

நேர்மறை சக்தி

நேர்மறை சக்தி தரும் .. நேர்மறை எண்ணங்களை வளர்க்க உதவும் 12 வழிகள் !     நலமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் ’ - என்பதுதானே நம் அனைவரின் ஆசை . ஆனால் , ஒருவரின் மகிழ்ச்சியைத் தீர்மானிப்பது அவருடைய மனநிலை மட்டுமே . நாம் வாழ்க்கையில் , இரண்டு வகையான மனிதர்களைச் சந்தித்திருப்போம் . ஒரு பிரிவினர் , தங்களுக்குக் கிடைத்த சாதாரண வெற்றியைக்கூட கொண்டாடித் தீர்த்துவிடுவார்கள் . ( இனிமையான சுவீட் கொடுத்து கொண்டாடுவார்கள் ) மற்றொரு பிரிவினரோ , கடுமையான முயற்சியால் கிடைத்த வெற்றியைக்கூட கொண்டாட மாட்டார்கள் . மாறாக , ` இதைவிட இன்னும் கொஞ்சம் கூடுதலாகக் கிடைத்திருக்கலாமே ’ என்று வருத்தப்பட்டுக்கொண்டிருப்பார்கள் . இதைத்தான் , ` மகிழ்ச்சி , துக்கம் இரண்டும் கிடைக்கும் வெற்றி , என்பது அந்தந்த தருணங்களில் இல்லை ; அது , நம் மனநிலையில் இருக்கிறது ’ என்கிறார்கள் அறிஞர்கள் . சுருக்கமாக , நமக்கு திருப்தியைத் தருவது நேர்மறை எண்ணங்கள்தான் .   ஐம்புலன்களுக்கும் மகிழ்ச்சித்தரும் எவையும் நமது மனதை நேர்மறைத்தன்மைக்கு கொண்டுவரும் சக்திகள் ...