தமிழ் பாரம்பரிய மருத்துவம்
இருளர் பழங்குடி மக்களின் மருத்துவ முறைகள் தமிழ் இலக்கியம் என்று இங்கு குறிப்பிடப்படுவது சங்க இலக்கியம் தொடங்கி இக்கால இலக்கியம் வரையிலான எழுத்திலக்கியங்களையேயாகும். நாட்டுப்புறப் பாடல்கள், கதைகள், பழமொழிகள், விடுகதைகள், மருத்துவ முறைகள், தொன்மங்கள் போன்றவையும் நாட்டுப்புறத்தில் அடங்கும். தமிழகக் கிராமப்புற மக்களின் வழக்காறுகளை ஆராய்ந்தால் அவர்கள் பல்வேறு கால நிலைகளில் வழக்கத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட வாழ்வியல் முறைகள் நமக்கு கிடைக்கின்றன. நாட்டுப்புற மக்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் புதிய குடியிருப்புகளைஅமைத்துக்கொண்டு வாழ்வதுமான போக்கினை உடையவர்கள் என்பதை அறிய முடிகிறது. இவ்வாறு இடம்பெயரும் மக்கள் தங்களின் பழைய மரபுகளையும் பழக்க வழக்கங்களையும் பண்பாடுகளையும் அப்படியே பின்பற்றுவதையும் இடத்துக்குத் தக்க மாற்றங்களையும், வாழ்க்கை முறைகளையும் மருத்துவ முறைகளையும் அப்படியே கையாண்டு வருவதைக் களஆய்வில் சேகரிக்கப்பட்டன. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயர்ந்து சென்ற பழங்குடி மக்களின் வாழ்க்கை முறைகளையும், மருத்துவ முறைகளையும் வாய்மொழிச் செய்திகள் உண்மையானவையா என்பதைக்...